பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் 'Topless Day' ஊர்வலம்!

பாலின சமத்துவத்தினை முன்னிலை படுத்து அமெரிக்க பெண்கள் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக வீதியில் ஊர்வலமாக சென்ற சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

Last Updated : Aug 28, 2018, 12:50 PM IST
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் 'Topless Day' ஊர்வலம்! title=

பாலின சமத்துவத்தினை முன்னிலை படுத்து அமெரிக்க பெண்கள் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக வீதியில் ஊர்வலமாக சென்ற சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

பாலின சமத்துவத்துவத்தை முன்னிலைப்படுத்தி மேற்கத்திய நாடுகளில் வித்தியாசமான போராட்டங்கள் நடப்பதுண்டு. இந்நிலையில் ஆகஸ்டு 26-ஆம் நாள் பெண்கள் சமத்துவ தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுவதையொட்டி அமெரிக்க பெண்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் மேலாடைகள் இன்றி ஊர்வலமாக சென்றுள்ளனர். பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக 'Topless day' என்னும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி, கனடா, சிலி, கொலம்பியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் 'Go Topless' என்கிற அறிவிப்புப் பலகையுடன் பலர் ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

வேடிக்கை என்னவென்றால், அமெரிக்காவில் இந்த ஊர்வலத்தில் பலர தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர். பெண்ணின் உடல் குறித்த சமூகத்தின் பார்வையை இந்த ஊர்வலம் மாற்றும் என இதில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 1994-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பெண்கள் சட்டையின்றி வெளியில் செல்லலாம் என்று சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. எனினும் மற்ற நகரங்களில், மாகாணங்களில் இதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News