TNPSC Jobs 2022: மீன்வள ஆய்வாளர் பதவிக்கு 64 காலியிடங்கள்! விண்ணப்பிக்க ரெடியா?

TNPSC recruitment 2022: தமிழகத்தில் மீன்வள ஆய்வாளர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 17, 2022, 02:21 PM IST
TNPSC Jobs 2022: மீன்வள ஆய்வாளர் பதவிக்கு 64 காலியிடங்கள்! விண்ணப்பிக்க ரெடியா? title=

TNPSC recruitment 2022: தமிழகத்தில் மீன்வள ஆய்வாளர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கிவிட்டது. தகுதியும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in இல் விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை  நவம்பர் 17 முதல் நவம்பர் 19 வரை விண்ணப்ப திருத்தச் சாளரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.  

மீன்வள ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு விவரங்கள்
காலிப் பணியிடங்கள்: மொத்தம் 64
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12, 2022 
 
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தங்கள் ஆவணங்களைப் பதிவேற்ற 2023  ஜனவரி 27 வரை கெடு கொடுக்கப்படும். தேர்வு கணினி அடிப்படையில் நடைபெறும்.   2023 அன்று பிப்ரவரி 8ம் தேதியன்று நடைபெறும் கணினித் தேர்வு இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படும். தேர்வின் முதல் தாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மற்றும் இரண்டாம் தாள் தேர்வு பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.

மீன்வள ஆய்வாளர் பணிக்கான தகுதி 
வயது வரம்பு: இட ஒதுக்கீடு அல்லாத பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் வயது ஜூலை 1, 2022 அன்று 32 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.  

மேலும் படிக்க | உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: இந்த நாட்டில் மருத்துவ படிப்பை தொடரலாம்

கல்வித் தகுதி: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட மீன்வள அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.150 என மொத்தம் 300 ரூபாய் செலுத்த வேண்டும்.

தேர்வு நடைமுறை

இரண்டு கட்ட தேர்வு நடைபெறும். கணினி அடிப்படையிலான சோதனை முறை மற்றும் நேர்காணல் என இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். CBT எனப்படும் கணினி அடிப்படையிலான தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.inக்கு செல்லவும். 
முகப்புப் பக்கத்தில், "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்ற தெரிவை தேர்வு செய்யவும்.
உங்களுக்கென பிரத்யேக உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உருவாக்கவும்.
பிறகு விண்ணப்ப செயல்முறையைத் தொடரவும்.
ஆவணங்களைப் பதிவேற்றவும், கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பபடிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News