திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த ஷாக்; சிறப்பு தரிசனம் ரத்து

திருப்பதியில் நேற்று 27,482 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11.565 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2021, 06:52 AM IST
திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த ஷாக்; சிறப்பு தரிசனம் ரத்து title=

Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான (Tirumala Tirupati Devasthanams) நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது. மேலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு 300 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது. இதன்படி நாளொன்றுக்கு 5000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

அதன்படி நேற்று 27,482 பேர் திருமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். 11,565 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். 3.73 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது. 

இதற்கிடையில் வரும் 30-31 ஆகிய தேதிகளில் கோ மகா சம்மேளன் என்ற பெயரில் விவசாயிகளுக்கான இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து சுமார் 1,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசன முறையானது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டது.

தற்போது வரை இந்த சேவைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த சூழலில் சிறப்பு தரிசன முறைக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. அது உண்மை இல்லை. எனவே பக்தர்கள் அவற்றை நம்பி திருமலைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News