இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு, பண வரவு: உற்சாகம் உச்சம் தொடும்

Horoscope February 13, 2022: இன்று, அதாவது ஞாயிற்றுக்கிழமை, கும்ப ராசிக்காரர்களின் மகிழ்ச்சியான அணுகுமுறை அனைவரையும் அவர்கள் பக்கம் ஈர்க்கும். கன்னி ராசிக்காரர்களின் வீட்டில் விருந்தினர்களின் நடமாட்டம் இருக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2022, 05:57 AM IST
  • இன்று ரிஷப ராசிக்காரர்களின் இதயத்தில் புதிய உற்சாகம் ஏற்படும்.
  • இன்றை நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
  • மீன ராசிக்காரர்களுக்கு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இதுவே நல்ல நேரம்.
இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு, பண வரவு: உற்சாகம் உச்சம் தொடும் title=

ராசிபலன் பிப்ரவரி 13, 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக மாற்றங்கள் ராசிகளில் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மாதம் பல வித கிரக மாற்றங்களுக்கான மாதமாக உள்ளது. ஜோதிட குரு பெஜான் தருவாலாவின் மகன் சிராக் தருவாலா, இன்றைய நாள் அனைத்து ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்களைக் கொண்டு வரும் என கணித்துள்ளார். அந்த விவரங்களை இங்கே காணலாம். 

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இன்று உங்கள் தனிப்பட்ட வேலைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் சில பெரிய ஆதாயங்களைப் பெறுவதற்கான அறிகுறிகள் காணப்படும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீட்டில் இருந்து நீங்கள் செய்யும் அலுவலக வேலைகளால் மேல் அதிகாரிகள் மகிழ்ச்சியடைவார்கள். 

ரிஷபம்: இன்று உங்கள் இதயத்தில் புதிய உற்சாகம் ஏற்படும். சில நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னர், அவர்களின் சட்டப்பூர்வ அம்சங்களை கவனிக்கத் தவறாதீர்கள். உத்தியோகஸ்தர்கள் முக்கியப் பொறுப்புகளைப் பெறக்கூடும். வீடு மாற வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாங்க நல்ல நேரம் அமைந்துள்ளது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மிதுனம்: ஞாயிறு அன்று நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். அதிகமான அதிர்ஷ்டம் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். கூட்டாண்மை மற்றும் வணிகப் பகிர்வு போன்றவற்றிலிருந்து விலகி இருங்கள். மனம் விட்டு பேசினால் சங்கடம் நீங்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் மீது மிகுந்த அன்பைக் காட்டுவார்கள். 

கடகம்: இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். இன்று அனைத்து வகையான பணப் பரிமாற்றத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நடத்தையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம். வீட்டிற்கு வெளியே மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கலாம்.

சிம்மம்: இன்று உங்களது உற்சாகம் உச்சத்தில் இருக்கும். சில நிதி விஷயங்களுக்கு இது ஏற்ற நாள். பெண்கள் சமையலறையில் வேலை செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். சிலர் சிறிய விடுமுறையை திட்டமிடலாம். துளசி செடியில் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நிலை சீராக இருக்கும்.

கன்னி: இன்று உங்கள் வீட்டில் விருந்தினர்களின் நடமாட்டம் கூடும். புதிய தொழிலில் பணத்தை முதலீடு செய்வது பற்றி யோசிக்கலாம். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இது நல்ல நாளாக அமையும். கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் தேவையற்ற பேச்சில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் சில புதிய மாற்றங்கள் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். வணிகத் துறையில் உள்ளவர்களைத் தொடர்புகொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். மிகவும் அவசியமானால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லவும்.

விருச்சிகம்: இன்றை நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். மார்க்கெட்டிங் செய்பவர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். தொழிலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். எந்த சூழ்நிலையிலும் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டாம். 

தனுசு: கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். வணிகர்கள் விரைவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறலாம். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அதிக உற்சாகத்துடன் பணத்தைச் செலவிட வேண்டாம். பணியிடத்தில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களிடமிருந்து பிரிந்து செல்லக்கூடும்.

மகரம்: உங்கள் வார்த்தைகளால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். உங்கள் முழு கவனத்தையும் உங்கள் இலக்கில் வைத்திருங்கள். சொத்துக்களில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். உங்களின் புத்திசாலித்தனமும், பணியில் ஈடுபாடும் அதிகாரிகளால் பாராட்டப்படும். பணியிடத்தில் பெண் சக ஊழியர்களை மதிக்கவும். குடும்பத்தில் பல சுப காரியங்கள் நடக்கும். 

கும்பம்: உங்களது துடிதுடிப்பு மக்களை உங்கள் பக்கம் ஈர்க்கும். குழந்தைகளுடன் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம். உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முடிந்தவரை முயற்சிப்பார்கள், கவனமாக இருங்கள். சில வேலைகளில் உங்கள் அன்புக்குரியவரின் உதவியைப் இன்று பெறக்கூடும்.

மீனம்: ஞாயிற்றுக்கிழமை, முக்கிய வேலைகளில் வெற்றி பெறப் போகிறீர்கள். மீன ராசிக்காரர்களுக்கு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இதுவே நல்ல நேரம். உங்கள் துறையில் முற்போக்கான மற்றும் பெரிய மாற்றங்களைச் செய்ய சக ஊழியர்கள் உங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள். உங்கள் நடத்தைக்காக அக்கம்பக்கத்தினர் உங்களைப் பாராட்டுவார்கள்.

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News