இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தின் செல்லப்பிள்ளைகள்: உங்கள் ராசியும் இதுதானா?

Astrology: செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2022, 05:52 PM IST
  • செவ்வாயின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்கள் நல்ல குணமுடையவர்களாக இருப்பார்கள்.
  • மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள்.
  • செவ்வாயின் செல்வாக்குடன் அதிர்ஷ்டமும் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தின் செல்லப்பிள்ளைகள்: உங்கள் ராசியும் இதுதானா? title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளுக்கும் அதிபதி கிரகங்கள் இருக்கும். இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு சில சிறப்பு குணங்கள் இருக்கும். 

இந்த குணங்களின் காரணமாக அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். மேலும், செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருகின்றது. செவ்வாயின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

மேஷம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள். இவர்கள் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பதில் வல்லவர்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். செவ்வாயின் செல்வாக்குடன் அதிர்ஷ்டமும் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | விரைவில் இந்த 2 ராசிக்காரர்கள் சனிபகவானின் பிடியில் சிக்குவார்கள் 

கும்பம்

செவ்வாயின் தாக்கம் கும்ப ராசியிலும் உண்டு. செவ்வாயின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்கள் நல்ல குணமுடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களின் நலன்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். செவ்வாயின் அருளால் கும்ப ராசிக்காரர்கள் அனைத்து விதமான வளங்களையும் பெற்று எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 

மகரம்

செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை எளிதாக கட்டுப்படுத்தி விடுகிறார்கள். இவர்களுக்கு அபார பொறுமையும் உண்டு. மேலும், அவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்கும்.

விருச்சிகம்

செவ்வாயின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்கள் அனைவருக்கும் சரியான போட்டியை அளிப்பவர்களாக் இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களை விட ஆற்றல் அதிகமாக இருப்பவர்கள். அவர்கள் தங்கள் இதயத்தில் உள்ளவற்றை அவ்வளவு எளிதில் மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் குறைந்த முயற்சியிலேயே பெரிய வெற்றியைப் பெற்று விடுவார்கள். 

செவ்வாய் தோஷத்துக்கான பரிகாரங்கள்

செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபட, ஒருவர் தனது இயல்பை முதன்மையாக கவனித்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றம் தேவைப்படலாம். மேலும், சூடான மற்றும் புதிய உணவை சாப்பிடுவதால், பலவீனமான செவ்வாய் வலுவடைகிறது. செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபட, ஆஞ்சனேயரை தொடர்ந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

மேலும் படிக்க | சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை, செல்வம் செழிக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News