சாணக்ய நீதியில், ஆச்சார்ய சாணக்கியர், மனிதர்கள் குணாதியசங்களை பற்றி கூறுகையில், சிலருக்கு செல்வம் சம்பாதிப்பதில் மிகவும் வல்லவர்களாக இருந்தாலும், கையில் காசு தங்காது என கூறியுள்ளார். என்ன தான் நன்றாக சம்பாதித்தாலும், எப்போதும் வறுமையில் வாடும் சிலரைப் பற்றி கூறியுள்ளார்.
தன்னை வசதியானவராக காட்டிக் கொள்ள நினைப்பவர்கள்
சிலர் தாங்கல் மிகவும் நல்ல நிலையில் இருப்பதையும், வசதியானவராகவும் காட்டிக் கொள்ள நினைப்பார்கள். தங்களை நல்ல நிலையில் இருப்பதாக காட்டிக்கொள்ள தவறான வழிகளில பணம் சம்பாதிக்க கூட சில சமயங்களில் தயக்க இருக்காது. தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது ஆடம்பர பொருட்களை வாங்கி, ஆடம்பர வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வார்கள் . மற்றவர்களை கவார வேண்டும் என, யோசிக்காமல் பணத்தைச் செலவழிக்கத் தொடங்குகிறார்கள். கணக்கின்றி பணத்தை செல்வழிப்பதால் இவர்களது பர்ஸ் காலியாகி விடுகின்றன.
தனக்கென குழுவை உருவாக்கி அவர்களுக்கு தன்னை தலைவர்களாக நினைத்துக் கொள்பவர்கள்
சிலர் தங்களை சக்திவாய்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள, தனக்கென குழுக்களை உருவாக்கி அவர்களின் தலைவர்களாக இருக்க விரும்புகிறார்கள். தனது குழுவில் உள்ள மற்றவர்களுக்கு உணவுகள் மற்றும் பிற பொருட்களை வாங்கிக் கொடுப்பது போன்றவற்றை செய்வார்கள். அவர்களுக்கு பல வகையில் தனது பணத்தை கொடுத்து அல்லது தங்கள் செல்வத்தைக் காட்டி அவர்களின் அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாததும், தனித்து நிற்கும் தைரியம் இல்லாததும்தான் இதற்கு எளிய காரணம். தாழ்வு மனப்பான்மையால் இப்படிப்பட்டவர்கள் ஒரு அடி எடுத்து வைக்கும் போதே தேவையற்ற செலவுகளை அதிகப்படுத்துகிறார்கள்.
எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள்
வாழ்க்கையில் எல்லாவற்றையும் பணத்தால் வாங்கி வடலாம் என்ற மனப்பானமை கொண்ட பலரை நாம் பார்த்திருப்போம். தங்களை மகிழ்ச்சியாகக் காட்டிக் கொள்ள, அத்தகைய மக்கள் ஆறுதல் அளிக்கும் அனைத்தையும் வாங்குகிறார்கள். அதே நேரத்தில், அத்தகையவர்கள் பணத்தின் மூலம் எதை வேண்டுமானாலும் வாங்கி விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்ககளாக இருப்பார்கள். தான் விரும்பியதை அடைய பணத்தை கொடுக்க தயாராக இருப்பார்கள். பணத்தால் எதையும், எந்த நபரையும் வாங்கலாம் என்று நினைக்கத் தொடங்கும் போது, இந்த சிந்தனை அவர்களை ஆதிக்கம் செலுத்தும் போதும் அந்த எண்ணத்தால் அவர்கள் அனைத்தையும் இழக்கிறார்கள்.
மேலும் படிக்க | உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!
கெட்ட பழக்கங்களுக்கு அடிகையானவர்கள்
புகை, மதுபானம், போதை போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்காதும் மேலும், இவர்கள் தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கவும் தயங்க மாட்டார்கள். சாணக்ய நீதியில், போதை ஒரு நபரின் மனசாட்சியை அழிக்கிறது என கூறப்பட்டுள்ளது. எனவே போதைக்கு அடிமையான ஒருவர் அதை ஒருபோதும் சிந்தனையுடன் செலவிடுவதில்லை. போதைக்கு அடிமையானவரின் ஒரே கவலை, அவரது போதை மற்றும் பிற கெட்ட பழக்கங்களை திருப்திப்படுத்துவதுதான். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயநலத்தில் மூழ்கி, கடனும் வறுமையுமாக வாழ்கிறார்கள். சில சமயங்களில் வீடுகளை விற்க வேண்டிய நிலை ஏற்படும்.
பேராசை கொண்ட மக்கள்
எதிலும் திருப்தி அடையாமல் 'கொஞ்சம் இன்னும் கொஞ்சம் வேண்டும்' என்ற உணர்வு பேராசைக்காரர்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டது. செல்வத்தில் கூட அவர்கள் மனம் திருப்தியடைவதில்லை. பேராசைக்காரர்கள் தங்கள் கஜானாவை நிரப்ப எந்த எல்லைக்கும் செல்லலாம். ஆனால் அவர்களின் இந்த பழக்கம் சில நேரங்களில் அவர்களுக்கு சுமையாக மாறும். பேராசை காரணமாக, அவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகின்றன, பேராசை காரணமாக அத்தகையவர்கள் எல்லாவற்றையும் இழக்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ