நம்மில் பலருக்கு ஒருவரை பார்த்தவுடன் ஏதோ உள்ளுக்குள் மின்னல் அடித்தது போன்ற ஒரு உணர்வு தோன்றும். இது ஒருவரை பார்த்தவுடன் வரும் முதல் ஈர்ப்பிற்கான அறிகுறி. இவர்களுடன் பேசப்பேச, பழக பழக இவர்களின் எண்ணங்கள், செயல்கள் என அனைத்தும் பிடித்து போனால் இதுவே ஒருதலை காதலாகவும் மாறவும் வாய்ப்புகள் இருக்கிறது. இங்கேதான் பெரிய ட்விஸ்டே இருக்கிறது. நமக்கு பிடித்த நபருக்கு நம்மை பல நேரங்களில் பிடிக்காமல் போய்விடும். நாம் அந்த நபரை வெளியில் கூப்பிடும் போது அதை மறுக்க தெரியாமல் ஓகே சொல்லிவிட்டு கடமைக்கென நாம் அழைக்கும் இடத்திற்கு வந்து செல்வர். இப்படிப்பட்ட அறிகுறிகள் உங்கள் க்ரஷ்ஷிடம் தெரிந்தால் நீங்கள் அவரை விட்டு விலகுவது நல்லது.
1.உரையாடலை ஆரம்பிக்க மாட்டார்கள்:
யாருக்காவது உங்கள் மீது உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் அவர்கள் உங்களிடம் கண்டிப்பாக பேச விரும்புவர். நீங்களே எல்லா உரையாடல்களையும் ஆரம்பிக்க வேண்டும் என காத்திருக்க மாட்டார்கள். உங்கள் க்ரஷ்ஷிற்கு உங்களை பிடித்திருந்தால் உங்களிடம் பேசிக்கொண்டே இருப்பதற்கு ஏதாவது சாக்கு தேடிக்கொண்டே இருப்பார்கள். உங்களுடன் அர்த்தமுள்ள ஒரு தொடர்பை ஏற்படுத்த அவர்கள் முயற்சிப்பார்கள். அப்படி உங்களுடன் உரையாடலை தொடங்க தயங்குபவர்கள் அல்லது நீங்கள் பேசும் போது ஆர்வமே இல்லாமல் உங்கள் க்ரஷ் கேட்டுக்கொண்டிருந்தால் அவருக்கு உங்கள் மீது ஈர்ப்ப இல்லை என்று அர்த்தம்.
மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு காதல் மழை பொழியப்போகிறது..! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
2. உங்களுடன் நேரம் செலவிட விரும்ப மாட்டார்கள்:
உங்களுக்கு பிடித்த நபர் உங்களுடன் நேரம் செலவிட அதிகம் விரும்புவர். உதாரணத்திற்கு நீங்கள் அவர்களிடம் பேச முற்பட்டாலோ அல்லது எங்கேயாவது வெளியே அழைத்தாலோ அதை தட்டிக்கழிக்க மாட்டார்கள். ஆனால் அதே சமயத்தில் உங்கள் க்ரஷ் உங்களை புறக்கணிக்க மாட்டார்கள். நீங்கள் எங்காவது வெளியில் அழைத்தால் உங்களுக்கு பிடித்த நபர் அதை தட்டிக்கழிக்கும் வகையில் ஏதாவதொரு காரணத்தை கூறினால் அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
3. உங்களைப்போன்ற செயல்பாடுகள் அவர்களிடம் இருக்காது:
நீங்கள் உங்கள் க்ரஷ்ஷின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக என்னென்ன செய்கிறார்களோ அந்த வகையான செயல்களை உங்கள் க்ரஷ் செய்யமாட்டார். உங்களிடம் பிறரிடம் நடந்து கொள்வது போல சிரித்து பேசுவார்களே தவிர உங்களிடம் ஸ்பெஷலாக எதுவும் நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படி உங்கள் க்ரஷ் உங்களிடம் எல்லாருடனும் இருப்பது போல பழகுகிறார் என்றால் அவருக்கு உங்கள் மீது விருப்பம் இல்லை என்று அர்த்தம்.
4. தொட்டு பேசமாட்டார்கள்:
உங்கள் மீது ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றநல் அவர் உங்களிடம் இருந்து உணர்வு ரீதியாகவும் சரி உடல்ரீதியாவும் விலகி இருப்பார். உங்களை தொட்டு கூட பேசமாட்டாரகள். உங்களுக்கு மிக அருகில் நிற்பதை கூட விரும்பமாட்டார்கள். உண்மையில் உங்கள் மீது ஒருவருக்கு ஈடுபாடு இருந்தால் அவரையே அறியாமல் அந்த நபர் உங்களை தொட்டு பேசுவர். அப்படி ஒருவர் உங்களிடம் நெருக்கமாக இல்லை என்றால் அது உங்கள் மீது விருப்பம் இல்லாததுதான் காரணம்.
5. உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்:
உங்களுக்கு பிடித்த நபர், உங்களைப்பற்றிய எந்த கேள்வியையும் உங்களிடம் கேட்கவில்லை என்றால் அவருக்கு உங்கள் மீது விருப்பமில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் நாளைப்பற்றியோ, உங்கள் குழந்தை பருவம் பற்றியோ, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ எந்த கேள்வியும் கேட்கமாட்டர்கள். உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் இருக்காது. அப்படி உங்களுக்கு பிடித்ஹ நபருக்கு உங்கள் மீது விருப்பம் இல்லை என தெரிந்து விட்டால், ஒதுங்கி விடுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ