PPF விதிகளில் அரசு மேற்கொண்டுள்ள முக்கிய மாற்றங்கள்

மிகவும் பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக கருதப்படும்,  வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது நடுத்தர வர்க்கம் முதலீடு செய்யும் மிக பிரபலமான சிறு சேமிப்பி திட்டம் ஆகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 11, 2022, 02:18 PM IST
  • கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யாமல் அதன் முதிர்வு காலத்தை நீட்டிக்கலாம்.
  • PPFக்கு எதிராக எடுக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம்.
  • பிபிஎஃப் இருப்பில் 25 சதவிகிதம் வரை நீங்கள் கடனாகப் பெறலாம்
PPF விதிகளில் அரசு மேற்கொண்டுள்ள முக்கிய மாற்றங்கள்  title=

மிகவும் பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக கருதப்படும்,  வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது நடுத்தர வர்க்கம் முதலீடு செய்யும் மிக பிரபலமான சிறு சேமிப்பி திட்டம் ஆகும்.

சிறுசேமிப்பு  தொடர்பான விதிகளில் அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது . இந்த மாற்றத்தின் காரணமாக, PPF (பொது வருங்கால வைப்பு நிதி) யிலும் மாற்றங்கள் காணப்படும். உங்களுக்கு PPF கணக்கு இருந்தால், இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த விதிகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வட்டி விகிதங்கள் முதல் மற்ற விஷயங்கள் வரை இந்த விதியில்  செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வோம்.

1. PPF பங்களிப்பு

எந்த மாற்றமும் இல்லாமல் PPF கணக்கில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பங்களிப்பைச் செய்யலாம். இருப்பினும், PPF கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகையானது ஒரு நிதியாண்டில் செய்யப்படும் பங்களிப்புகளின் எண்ணிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பங்களிப்புத் தொகை ரூ.50 இன் மடங்குகளில் இருக்க வேண்டும் மற்றும் ரூ.500க்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும். இப்போது, ​​ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பங்களிப்பாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

2. புதிய படிவத்தைப் பயன்படுத்துதல்

PPF கணக்கைத் திறக்க, இப்போது படிவம் A-க்குப் பதிலாக படிவம் 1-ஐச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வடிவம் முன்பு பயன்படுத்தப்பட்டது.

மேலும்  படிக்க | HDFC வங்கியின் எக்ஸ்பிரஸ் கார் லோன்; அரை மணி நேரத்தில் கார் கடன்

3. கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யாமல் அதன்  முதிர்வு காலத்தை நீட்டிக்கலாம்

PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யாமல் 15 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்குப் பிறகு உங்கள் PPF கணக்கை நீட்டிக்க நீங்கள் தேர்வுசெய்தால் PPF கணக்கை நீட்டிப்பது சாத்தியமாகும். இருப்பினும், அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒருமுறை மட்டுமே நீங்கள் பணத்தை எடுக்க முடியும்.

4. PPFக்கு எதிராக எடுக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம்

முன்னதாக பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் மீது எடுக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதம் 2 சதவீதமாக இருந்தது. தற்போது 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | முதலீட்டு டிப்ஸ்: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 15 x 15 x 15 பார்முலா

5. கடன் விதிமுறைகளில் மாற்றம்

பிபிஎஃப் கணக்கிற்கு எதிராக நீங்கள் கடன் வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கணக்கில் உள்ள பிபிஎஃப் இருப்பில் 25 சதவிகிதம் வரை நீங்கள் கடனாகப் பெறலாம்.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News