முகம் தெரியாத நபர் ஒருவரை முதல் முறை பார்க்கும் போது நம்புவது என்பது சாத்தியமில்லாத விஷயம்!
ஆனால் அவ்வாறு மருத்துவரிடமே, வழக்கறிஞரிடமோ கூற முடியாது என்பார்கள். தற்போது இந்த பட்டியலில் tattoo கலைஞர்களையும் இணைத்துக்கொள்ளலாம்.
ஆம் முகம் தெரியாத ஒரு நபரை தேடிச்சென்று அவரிடம் நம் உடலை கொடுத்து விரும்பிய ஓவியத்தை பெற்று வருகின்றோம் அல்லவா. இந்த நம்பிக்கையினை பயன்படுத்தி தான் ஐக்கிய நாடுகளை சேர்ந்த tattoo கலைஞர் Maison Hefner “My Words Your Body” செயல்திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றார்.
பிரபல tattoo கலைஞரான இவரிடம் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வடிவத்ததினை வரைந்து தாருங்கள் என கோருவதில்லை., மாறாக Maison Hefner தான் வாடிக்கையாளர்களுக்கு வடிவங்களை தேர்ந்தெடுத்து வரைவார். மேலும் வாடிக்கையாளரின் உடலில் எப்பகுதியில் படம் வரையவேண்டும் என்பதினையும் அவர் தான் முடிவு செய்வார்.
இவர் கைவண்ணம் மிகவும் எளிமையானவை தான்... இதற கலைஞர்கள் போல் மெனக்கெட்டு பெரிய புகைப்படங்களை வரைவதில்லை... சிறு வாக்கியங்கள் மட்டும் தான். இந்த வாக்கியங்களுக்கு அடிமையான வாடிக்கையாளர்கள் இவரிடம் tattoo பதித்துக்கொள்ள திரண்டு வருகின்றனர்.