புதுடெல்லி: சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஜனவரியில் ராசி மாற்றப் போகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 14-ம் தேதி சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார். அதன் பிறகு ஜனவரி 16-ம் தேதி தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். செவ்வாக்குப் பிறகு செல்வத்திற்குக் காரணமான சுக்கிரனும் தனுசு ராசிக்குள் நுழைவார். இந்த மூன்று கிரகங்களின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய ராசிகள் மாறுவதால் என்ன பலன்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) நம்பிக்கை குறையும். மன உளைச்சலை சந்திப்பீர்கள். இருப்பினும் உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். சிகிச்சை செலவு அதிகரிக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டில் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் ஜனவரி 15 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணியிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும், இதன் காரணமாக அதிக கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க
மிதுனம்: பொறுமை குறைவு ஏற்படும். ஜனவரி 14 முதல் வேலையில் சிரமங்கள் ஏற்படலாம். உங்களின் (Gemini) உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், ஜனவரி 16 முதல், முன்னேற்றம் தொடங்கும்.
கடகம்: ஜனவரி 16 முதல் தேவையற்ற கோபம் அதிகரிக்கலாம். அதிலிருந்து விலகி இருப்பது நல்லது. பொருளாதார நிலை மேம்படும். உத்யோகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
சிம்மம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் ஜனவரி 14க்கு பிறகு பிரச்சனை ஓரளவு அதிகரிக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் அதிகரிக்கும். ஜனவரி 16க்கு பிறகு பொறுமையும் விடாமுயற்சியும் குறையும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னி: தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆனால் ஜனவரி 15க்கு பிறகு உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வரும். சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். வருமானத்தை விட செலவுகள் அதிகரிப்பதால் நீங்கள் கவலைப்படலாம்.
துலாம்: ஜனவரி 14க்கு பிறகு வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம். மனம் சஞ்சலமாக இருக்கும். வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். துணையுடன் சண்டை வரலாம். ஜனவரி 16 முதல் உங்கள் தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.
விருச்சிகம்: ஜனவரி 14க்கு பிறகு பிரச்னை வரலாம். உத்தியோகத்தில் அதிக உழைப்பு இருக்கும். கல்வி தொடர்பான பணியில் தீவிர மாற்றம் ஏற்படும். ஜனவரி 16-ம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தையை கட்டுப்படுத்த வேண்டும். இருப்பினும் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு: மன உளைச்சல் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். ஜனவரி 14 முதல் பேச்சில் நிதானம் இருக்கும். ஜனவரி 16 முதல் குழந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.
மகரம்: ஜனவரி 14 முதல் தன்னம்பிக்கை குறையும். இதனால் மனம் கலங்கும். சில காலம் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டி வரும். ஜனவரி 16 முதல் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
கும்பம்: ஜனவரி 14க்கு பிறகு வாழ்க்கைத்துணையை கவனித்துக் கொள்ள வேண்டி வரும். செலவுகள் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
மீனம்: மன உளைச்சல் உங்களைத் தொல்லை செய்யும். ஜனவரி 14 முதல், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கல்வி தொடர்பான பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும்.
ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR