இனி வெயிலை பற்றிய கவலை வேண்டாம்.... வந்துவிட்டது பாக்கெட் AC!!

சோனி நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ரூபாய் விலையில் பாக்கெட் AC-யை அறிமுகப்படுத்தியுள்ளது!!

Last Updated : Jul 26, 2019, 04:19 PM IST
இனி வெயிலை பற்றிய கவலை வேண்டாம்.... வந்துவிட்டது பாக்கெட் AC!! title=

சோனி நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ரூபாய் விலையில் பாக்கெட் AC-யை அறிமுகப்படுத்தியுள்ளது!!

கோடைகாலங்களில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த நமெக்கெல்லாம் தற்போது ஜக்ஃபட் அடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஆம், இனி வெயிலை நினைத்து பயப்பவேண்டாம் எங்கு சென்றாலும் இந்த ஏ.சி-யை வைத்துக்கொண்டால் போதும் நமது உடலில் குளிர்ச்சியான காற்றே வீசும்.

ஸ்மார்ட்போன்களை விட மிக சிறிய அளவிலான இந்த ஏ.சி.யை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டைக்குள் அணியக் கூடிய வகையில் S, M, மற்றும் L சைஸ்களில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஏ.சி-உடன் சேர்த்து ஒரு டி சர்ட்டும் வழங்கப்படுகிறது. குட்டி ஏ.சி.யை வைத்துக் கொள்ளத் தேவையான பாக்கெட்டும் அந்த டி-ஷர்ட்டில் உள்ளது.

இதை அணிந்து கொண்டு அதற்கு மேல் சட்டை அணிந்து கொண்டால் ஏ.சி.யின் ஜில்லென்ற காற்று ஆடைக்குள்ளேயே உலவும். இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள முடியும். ஏ.சியின் கூலிங்கை புளூடூத் மூலம் ஸ்மார்ட்போனில் கட்டுப்படுத்தலாம்.

2 மணி நேரம் சார்ஜ் போட்டால் ஒன்றரை மணி நேரம் வரை இந்த ஏ.சி.யை உபயோகப்படுத்த முடியும். இந்த பாக்கெட் ஏ.சி.யை சோனி நிறுவனமானது இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 992 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Trending News