27 ஆம் தேதி மண்டல பூஜை சபரிமலையில் தரிசன நேரம் குறைப்பு ஐயப்பன் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்.
வரும் 26 ஆம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணம் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சூரியன், சந்திரன், கேது, குரு, சனி, புதன் முதலான ஆறு கிரகங்களின் சேர்க்கை நடக்கவிருக்கிறது. தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு நெருப்பு வளையம் போன்று தோன்றும் முழு சூரிய கிரகணம் தெரியவுள்ளது.
நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் முழுமையாக பார்க்க முடியும். மற்ற பகுதிகளில் பகுதி சூரிய கிரணகன காட்சியை காணலாம்.
அந்தவகையில் வருகிற 27 ஆம் தேதி காலை 10.10 மணி முதல் பகல் 11.40 மணி வரை பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடை பெற உள்ளது. இதனால் பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் கூடுதல் போலீசார் நியமிக் கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 26 ஆம் தேதி சூரிய கிரகணம் உள்ள நிலையில் சபரிமலை கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் தொடங்கி காலை 6.45 மணி வரை நடைபெறும்.
சூரிய கிரகணத்திற்காக காலை 7.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறந்து ஒரு மணி நேரம் மட்டும் நெய் அபிஷேகம் நடைபெறும்.
சூரிய கிரகணத்திக்கு மறுநாள் மண்டல பூஜை அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். மண்டல பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜை கள் நடத்தப்படும். இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் நிறைவுபெறும்.