உலகையே கொராேனா பேரிடர் தாக்கியதை தொடர்ந்து, பலருக்கு வர்க்-ஃபரம்-ஹோம் கொடுத்து வீட்டிலேயே வேலை பார்க்கின்றனர். கொராேனா இந்த உலகை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தாலும், அதனால் வந்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கலாச்சாரம் பல இடங்களில் மாறாமல் உள்ளது. இது, பலருக்கு பழகி விட்டதால் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கவும் பலர் தயாராக இல்லை. ஆனால், இப்படி வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் மன நலனில் பெரிய பிரச்சனை ஏற்படும் என சில மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது என்ன பிரச்சனை தெரியுமா?
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பலர், தங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் இருந்த தொடர்பில் இருந்து பெரிய விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், வழிகாட்டல் இன்றி தவிப்பதாகவும் ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வர்க் ஃப்ரம் ஹோமில் இருந்தவர்களில் பலருக்கு இடைவிடாத மீட்டிங், இடைவிடாத வேலைகள் இருந்து கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள், சோர்வு, பதற்றம், மனசோர்வு ஆகியவற்றிற்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆதரவு இல்லாதது போன்ற உணர்வு:
மனிதர்களை சமூக விலங்குகள் என்று பலர் குறிப்பிடுவதுண்டு. நம்பிக்கை வைப்பதற்கு, ஆதரவு பெருவதற்கு, தனிமை உணர்வில்லாமல் இருப்பதற்கு என அனைத்திற்கும் நமக்கு பல மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, உடன் வேலை பார்ப்பவர்கள் யாரும் இல்லாமல், நாம் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது, நமது மன நலனை பெரிய அளவில் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
சோர்வு உணர்வு:
கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு, அதிகளவில் வேலைகள் கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் அதிக நேரம் வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதை, சில மருத்துவ ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இது, சோர்வு உணர்வை வேலை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும் என கூறப்படுகிறது.
வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்கள், அதிகளவு வேலையாலும் தங்களுக்கு ஆதரவு கிடைக்காமல் போவதாலும் அவர்களுக்கு தினம் தினம் ஏற்படும் வேலை பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு சிரமமாக இருப்ப்பதாக கருதுகின்றனர். இது, அவர்களின் மன நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறாது. இதனால், இது கவலையை அதிகரித்து, மன சோர்வையும் தூண்டி விடுமாம்.
இதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் இருந்து வேலை செய்வதனால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான டிப்ஸ்.
>பிறர், ஆதரவு இல்லாமல் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க, வழிகளை தேர்வு செய்ய வேண்டும்.
>வேலை-தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்து இரண்டிலும் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்,
>உங்கள் உடன் வேலை பார்ப்பவர்கள், ஏதேனும் பிரச்சனை என்று உங்களிடம் கூறினால் அதை கேட்டு, அவருக்கு பக்க பலமாக இருங்கள்.
மேலும் படிக்க | காலையில் காபியை தவிர்த்துவிட்டு டீ குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ