இன்றைய காலகட்டத்தில் பலரும் மது அருந்த தொடங்கிவிட்டனர், அதிலும் குறிப்பாக பீர் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. மற்ற மதுபானங்களை காட்டிலும் பீர் குடிப்பது பெரியளவில் ஆபத்தினை ஏற்படுத்தாது என்று பலரும் நினைக்கின்றனர், ஆனால் அது முற்றிலும் தவறு, தினமும் பீர் குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது. எந்த மதுபானமாக இருந்தாலும் அளவுடன் குடிப்பது உங்களுக்கு நல்லது, அளவுக்கு மீறினால் அது பல்வேறு வகையான ஆபத்துக்களை ஏற்படுத்திவிடும். ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, ஆண்கள் அதிகபட்சம் இரு 12-அவுன்ஸ் பீர் மற்றும் பெண்கள் அதிகபட்சம் ஒரு 12-அவுன்ஸ் பீர் வரை அருந்தலாம்.
ஒரு பீர் உங்கள் உடலில் ஒரு டன் வெற்று கலோரிகளை சேர்க்கும், இதனால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்கும் மற்றும் பீர் அதிகம் குடிப்பது தொப்பை போடுவதற்கு வழிவகுக்கும். சராசரியான பீர் கேன் சுமார் 150 கலோரிகளை கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் உணவில் வேறு எதையும் மாற்றாமல் ஒரு நாளைக்கு ஒரு கேன் பீர் மட்டுமே குடித்தால், ஒரு வருடத்தில் உங்கள் உடலில் 15.5 பவுண்டுகள் அதிகரிக்கும். பெரும்பாலும் பார்கள் மற்றும் உணவகங்களில் மதுபிரியர்கள் சிலர் அதிகளவிலான பீர்களை அருந்தி விடுகின்றனர், இதனால் உங்கள் உடலில் கலோரி எண்ணிக்கை ஒரு பானத்திற்கு 50-100 வரை அதிகரிக்கலாம். பீர் குடிப்பதோடு பலரும் நிறுத்திவிடுவதில்லை, இதனுடன் சேர்த்து அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ளும்போது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!
சிலர் மன அமைதிக்காகவும் பீர்களை அருந்தலாம், ஆனால் நீங்கள் வாரத்திற்கு 15 முதல் 12-அவுன்ஸ் பீர் கேன்களுக்கு மேல் குடித்தால் உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களது ஆயுட்காலமும் நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பீர் வகைகளை பொறுத்து உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. டார்க் பீர்ர்களில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மைக்ரோப்ரூக்கள் உள்ளது, அவை அதிக பாலிஃபீனால் நிறைந்த ஹாப்ஸைக் கொண்டிருக்கின்றன. லைட்டர் பீர்களுடன் ஒப்பிடும்போது டார்க் பீர்களில் அதிக இரும்புச்சத்து உள்ளது.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நீங்கள் பீர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஜிம் செல்பவராக இருந்தால் கட்டாயம் மதுப்பழக்கத்திலிருந்து விலகியே இருக்க வேண்டும். பீர் நீரிழப்பை ஏற்படுத்துகிறது, உடற்பயிற்சி செய்பவர்கள் இதை குடித்தால் உங்களால் சரியாக உடற்பயிற்சி செய்யமுடியாது. கூடுதலாக, ஒரு வொர்க் அவுட்டிற்குப் பிறகு பீர் குடிப்பது உடலில் நீரிழப்பையும், தசைகளில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் சோர்வு, பலவீனமான கை-கண், கவனக்குறைவு, இரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் மற்றும் இதயத் துடிப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக பீர் அருந்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. இதனால் இதய நோய் அல்லது பக்கவாதம் கூட ஏற்படும் அபாயம் உள்ளது மற்றும் அதிகமாக பீர் குடிக்கும் போது இரத்த நாளங்கள் சுருங்குகிறது, இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதிகமாக பீர் குடிக்கும்போது, அது இன்சுலின் செயல்திறனைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது, இதனால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ