இந்த புகைப்படத்தைப் பார்த்தால், மறைந்த திரு ரத்தன் டாடாவுடன் இருப்பவர் அவரது பேரனோ அல்லது உறவினரோ என்று தோன்றலாம். ஆனால், திருமணமே ஆகாத ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் இந்த இளைஞர் என்பது ஆச்சரியமான விஷயம். மனிதநேயம் தான் ஷாந்தனு நாயுடு என்ற இளைஞரை உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமாக மாற்றியது என்பதும், தற்போது அவர் டாடா அறக்கட்டளையின் பொது மேலாளார் என்பதும் ஆச்சரியமான ஆனால் நிதர்சனமான உண்மை.
இந்தியாவின் அடையாளமாய், உலகளவில் ஒப்பற்ற தொழிலதிபராய் பலரின் வாழ்க்கையை உய்வித்த ஆதர்ஷ நாயகர் ரத்தன் டாடாவின் மறைவும், டாடா குழுமத்திற்கு இது ஈடு செய்ய முடியாத இழப்புதான். ஆனால் காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை என்பது தான் வாழ்க்கையின் நிதர்சனம். டாடா அறக்கட்டளை குழுவின் தலைவராக, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான ’நோயல் டாடா’ நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையின் தலைவராக 66 வயது நோயல் டாடா இருக்கிறார் என்றால், இந்த டிரஸ்டின் பொது மேலாளர் ஷாந்தனு நாயுடுவின் வயது 30 தான். இவர், மறைந்த ரத்தன் டாடாவுடன் 2014 முதல் நெருங்கிய நண்பராகவும், அலுவலக பணியாளராகவும் பணிபுரிபவர்.
யார் இந்த சாந்தனு நாயுடு?
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் சாந்தனு நாயுடு, பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ரத்தன் டாடாவின் நிறுவனங்களில் ஒன்றான டாடா எல்க்சியில் பயிற்சியாளராக சேர்ந்து பணிபுரிந்தார். சாந்தனு 2014 ஆம் ஆண்டு டாடா எல்க்சியில் டிசைன் இன்ஜினியராகப் பணிபுரிந்தபோது, நடுரோட்டில் வாகனத்தில் அடிபட்டு இறந்துகிடந்த நாய் ஒன்றைப் பார்த்தார்.
நாய்கள் மீது சாந்தனுவுக்கு இருந்த காதல், தெருநாய்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. அப்போதுதான் ரிப்ளக்டர்கள் கொண்ட நாய் காலரை வடிவமைக்கும் யோசனை சாந்தனுவுக்கு வந்தது. தனது திட்டத்திற்கு போதுமான நிதி திரட்டும் முயற்சியில் சாந்தனு ஈடுபட்டிருந்தபோது, அவரது தந்தை ரத்தன் டாடாவுக்கு கடிதம் எழுத அவரை ஊக்கப்படுத்தினார்.
சாந்தனுவின் கடிதத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு பதில் கிடைத்தது. விரைவில், நாயுடு, தனது நண்பர் ஒருவருடன், மும்பையில் ரத்தன் டாடாவைச் சந்திக்கச் சென்றார். முதல் சந்திப்பு அருமையானதாக இருந்தாலும், சாந்தனு, பண உதவி கேட்க தயங்கினார். ஆனால், ரத்தன் டாடா சாந்தனுவின் யோசனைக்கு ஊக்கமளித்து முதலீடு செய்தார்.
மேலும் படிக்க | சாமானியர்களும் தொழிலதிபர் ரத்தன் டாடாவை ஏன் கொண்டாட வேண்டும்?
Ratan Tata-backed startup என்று சாந்தனு குறிப்பிடும் இந்த திட்டம் ஒரு முன்முயற்சி என்றால், சாந்தனுவின் அன்பும் மனிதநேயமும், ரத்தன் டாடாவின் மனிதநேயம் மிக்க பண்பும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போக, காலப்போக்கில், அவர்களின் நட்பு ஆழமடைந்தது. 2018 முதல், நாயுடு ரத்தன் டாடாவின் மேலாளராக பணியாற்றினார், டாடாவின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு பொறுப்புகள் மற்றும் முயற்சிகளைக் கையாண்டார்.
குட்ஃபெலோஸ்
சாந்தனு நாயுடுவும் குட்ஃபெலோஸ் என்ற பெயரில் வணிகம் செய்கிறார். முதியவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் உதவியாளர்களை வழங்கும் வணிகத்தில் சாந்தனு ஈடுபட்டுள்ளார். குட்ஃபெலோஸ் என்ற சாந்தனுவின் நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.
ரத்தன் டாடாவுக்கு சாந்தனு நாயுடு அஞ்சலி
’ரத்தன் டாடாவுடனான எனது நட்பு வார்த்தைகளால் வடிக்க முடியாதது. அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. அன்பின் விலை துக்கம் தான்.... சென்று வாருங்கள் எனது கலங்கரை விளக்கமே...’ என சாந்தனு ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் படிக்க | டாடா அறக்கட்டளைகளின் தலைவராக நோயல் டாடா நியமனம்: யார் இந்த நோயல் டாடா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ