சனி பெயர்ச்சி 2022: சனியால் யாருக்கு கஷ்டம், விடுபட இதுதான் பரிகாரம்

தனுசு, மகரம், கும்பம் ராசிக்கு ஏழரை சனி நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிகிறது மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்குகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2022, 10:18 AM IST
  • சனி பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்
  • 5 ஜூன் 2022 அன்று சனி பெயர்ச்சி
  • கண்டிப்பாக இதை செய்யுங்கள்
சனி பெயர்ச்சி 2022: சனியால் யாருக்கு கஷ்டம், விடுபட இதுதான் பரிகாரம் title=

ஏழரை சனி காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். இப்போது தனுசு, மகரம், கும்பம் ராசிக்கு ஏழரை சனி நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிகிறது மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்குகிறது. சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ராசிக்கு 12ஆம் வீடு, ஜென்ம ராசி, இரண்டாம் வீடுகளில் சனிபகவான் கோச்சார ரீதியாக அமரும் காலங்கள் ஏழரை சனி.

அதன்படி சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது. 29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். பின்னர் 5 ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார். சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மிகவும் சக்திவாய்ந்த பார்வை உள்ளது. ஏழாமிடத்தைத் தவிர, மூன்றாவது மற்றும் பத்தாம் பார்வையும் சனியின் பார்வை, வெவ்வேறு கிரகங்கள் மீது படுவதால், பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். சனிபகவானின் அருள் உங்களுக்கு இருக்கட்டும். இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் சில எளிய பரிகாரங்கள் உள்ளன, அதை பின்பற்றி சனியின் வக்ர பார்வையை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

கண்டிப்பாக இதை செய்யுங்கள்
* சனியின் கண்களைக் கொண்ட சனியின் சிலையை ஒருபோதும் தரிசிக்காதீர்கள்.
* ஒவ்வொரு சனிக்கிழமையும் ஹனுமானுக்கு சிவப்பு நிற வஸ்த்திரத்தை அர்ப்பணிக்கவும்
* ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யுங்கள்.
* தினமும் மாலை மேற்கு திசையில் தீபம் ஏற்றி சனி பகவானின் மந்திரத்தை ஜபிக்கவும்.
* நீல நிறத்தை அதிகம் பயன்படுத்துங்கள்.
* துளசி செடியில் தண்ணீர் ஊற்றவும்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு வருவதால் யாருக்கு சாதகம்
* மேஷம்: பொருளாதார நிலை சிறப்பாக மேம்படும். இவர்களுக்கு அலுவலகத்தில் பாராட்டுக்கள் குவியும். 
* ரிஷபம்: உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வெற்றி தரக்கூடிய அதிர்ஷ்டம் அமையும். 
* சிம்மம்: கடின உழைப்புக்கு அதற்கான முழு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு அமையும்.
* கன்னி: போட்டித் தேர்வுகளுக்காக முயன்று வரக்கூடிய இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதோடு, வெற்றியும் நிச்சயம் கிடைக்கும். 
* துலாம்: மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News