SBI VS HDFC Bank: எந்த வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் அதிக பலன் தரும்

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி சமீபத்தில் பல்வேறு காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ரூ.2 கோடி வரை உயர்த்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 12, 2022, 12:19 PM IST
  • ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
  • எஸ்பிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி
  • குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட்
SBI VS HDFC Bank: எந்த வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் அதிக பலன் தரும் title=

கடந்த ஒன்றரை மாதங்களில், கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்டின் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டைப் பெற நினைத்தாலோ அல்லது பழைய ஃபிக்ஸட் டெபாசிட்டை புதுப்பிக்க நினைத்தாலோ, நீங்கள் குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட்டைப் பின்பற்றுவது நல்லது. அதன் மூலம் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்டைகளை ஒப்பிடுவதும் உங்களுக்குப் பயனளிக்கும்.

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி சமீபத்தில் பல்வேறு காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ரூ.2 கோடி வரை உயர்த்தியுள்ளது. வங்கியின் புதிய விகிதங்கள் ஏப்ரல் 6, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ பிப்ரவரி 15 முதல் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்தது.

மேலும் படிக்க | ஆயுள் காப்பீடு எடுக்கும்போது கவனம் தேவை: இந்த தவறுகளால் சிக்கல் வரலாம்

எஸ்பிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியில் எவை சிறந்த ஃபிக்ஸட் டெபாசிட் தருகிறது பற்றிய தகவல்களை இங்கே காண்போம்.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 10-15 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன
எச்.டி.எஃப்.சி இப்போது ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 5.10 சதவீத வட்டியை வழங்குகிறது. வங்கி வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேல் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதே விகிதத்தை வங்கி வழங்குகிறது. எச்.டி.எஃப்.சி வங்கி மூத்த குடிமக்களுக்கு அரை சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது. அதேசமயம் எஸ்பிஐ ரூ.2 கோடி வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்களை 10-15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. எஸ்பிஐ 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5.20 சதவீத வட்டி அளிக்கிறது.

சாதாரண மக்களுக்கு ரூ.2 கோடி வரை எஃப்டி மீதான வட்டி விகிதம்

காலம் எச்.டி.எஃப்.சி எஸ்பிஐ
6-9 மாதங்கள் 4.40 சதவீதம் 4.40 சதவீதம்
9 மாதங்கள் முதல் 1 வருடம் வரை 4.40 சதவீதம் 4.40 சதவீதம்
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை 5.10 சதவீதம் 5.10 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 5.20 சதவீதம் 5.20 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 5.45 சதவீதம் 5.45 சதவீதம்

இந்த இரு வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு எஃப்டிகளில் 0.40 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை கூடுதல் வட்டியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News