வங்கி ஊழியர்களுக்கு மார்ச் மாதம் ஊதிய உயர்வு, DA Hike: மொத்தத்தில் பண மழை

அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2021, 07:28 PM IST
  • அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரவுள்ளது.
  • அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி 3.3% அதிகரித்துள்ளது.
  • ஊழியர்களின் ஊதியம் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும்.
வங்கி ஊழியர்களுக்கு மார்ச் மாதம் ஊதிய உயர்வு, DA Hike: மொத்தத்தில் பண மழை title=

Good News for Bank Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் ஊதிய ரீதியாக பல நல்ல செய்திகள் வரவுள்ளன. அவர்களது அகவிலைப்படி, பயணப்படி ஆகியவை அதிகரிக்கவுள்ளன.

அதே போல், அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு பிப்ரவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலத்திற்கானதாகும். இந்த உத்தரவை இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வெளியிட்டுள்ளது.

விலைக் குறியீடு அதிகரித்திருக்கிறது

AIACPI (அகில இந்திய சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு) 2020 அக்டோபரில் 7855.76 ஆக உயர்ந்தது. இதில் மேலும் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இது முறையே 7882.06 மற்றும் 7809.74 ஆக உள்ளது.

DA இந்த வழியில் கணக்கிடப்படும்

DA Slab 7849-6352 = 1497/4 = 374 ஸ்லாப்ஸ் கடந்த காலாண்டில் ஸ்லாப் = 341

DA-வில் அதிகரிப்பு = 374-341 = 33 ஸ்லாப் (3.3%)

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, TA உயர்வு பற்றிய முக்கிய செய்தி

இதுதான் முழுமையான கணக்கீடு

SBI PO-வின் ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ .27000 ஆகும். DA-வில் 3.3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டால் மாதத்திற்கு சுமார் 900 ரூபாய் சம்பளம் உயரும். இதில் 4 சம்பள உயர்வுகளும் சேரும். பதவி உயர்வுக்குப் பிறகு, அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ .42000 வரை செல்லும். இந்த அளவிலான அடிப்படை ஊதியம் பெறும் பி.ஓ.க்களின் சம்பளத்தில் சுமார் 1386 ரூபாய் வித்தியாசம் இருக்கும். அதே நேரத்தில், உயர் அதிகாரிகளின் சம்பளம் ஆயிரக்கணக்கான ரூபாய் அதிகரிக்கும்.

8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் பயனடைகிறார்கள்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் 8.5 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு (Bank Employees) மற்ற துறைகளைக் காட்டிலும் 2020 ஆம் ஆண்டு நல்ல விதமாகவே இருந்தது. ஆண்டுதோறும் சம்பளத்தை 15% அதிகரிக்க வங்கி ஊழியர் சங்கத்திற்கும், இந்திய வங்கிகளின் சங்கத்திற்கும் (IBA) இடையில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தால் வங்கிகளின் மீது ரூ .7,900 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டது.

2020 இல் சம்பளம் அதிகரித்தது

வங்கி நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான IBA மற்றும் வங்கிகளின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) ஆகியவற்றிற்கு இடையிலான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வங்கி ஒன்றியத்துடன் ஒப்பந்தம்

வங்கி தொழிற்சங்கங்கள் மற்றும் IBA இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்த சம்பள உயர்வு (Salary Hike) நவம்பர் 2017 முதல் அமலுக்கு வருகிறது. அதாவது, வங்கி ஊழியர்களுக்கு சுமார் 30 மாத நிலுவைத் தொகை கிடைத்தது. ஒப்பந்தத்தின்படி, 31 மார்ச் 2017 சம்பள பில்லின் படி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஆண்டுக்கு 15 சதவீதம் அதிகரிக்கும்.

ALSO READ: 7th Pay Commission: ஏப்ரல் முதல் மாறுகிறதா உங்கள் PF, Gratuity பங்களிப்பு? விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News