66 கிலோ தங்கம் + 336 கிலோ வெள்ளியில் உருவான சதுர்த்தி பிள்ளையார்! கடவுள் கணபதிக்கும் காப்பீடு

Richest Ganpati: தங்கத்தில் ஜொலிக்கும் பிள்ளையார்! இது மும்பையில் எழுந்தருளியுள்ள விநாயகர் சதுர்த்தி கணபதியின் அழகிய தோற்றம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2023, 11:08 AM IST
  • மும்பையில் தங்கப் பிள்ளையார்
  • விநாயகர் சதுர்த்தி கணபதி பண்டால்
  • தங்கத்திலும் வெள்ளியிலும் ஜொலிக்கும் கணபதி
66 கிலோ தங்கம் + 336 கிலோ வெள்ளியில் உருவான சதுர்த்தி பிள்ளையார்! கடவுள் கணபதிக்கும் காப்பீடு title=

மும்பை: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மகாராஷ்டிராவில் 10 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். வழக்கம்போல, இந்த ஆண்டும் பல விநாயகர் மண்டல்களும் கணபதி சிலைகளை வித்தியாசமாக அமைத்து பக்தர்களை கவர்ந்துள்ளன. சிலை தயாரிப்பு, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகள் என பில் கடந்த பல மாதங்களாக கணபதி மண்டல்கள் முழுவேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

எந்த மண்டலின் சிலை வித்தியாசமாக இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி மண்டல்களில், தங்கத்தில் ஜொலிக்கும் பிள்ளையார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மும்பையில் எழுந்தருளியுள்ள விநாயகர் சதுர்த்தி கணபதிகளில் 66 கிலோ தங்கம் மற்றும் 336 கிலோ வெள்ளியில் உருவான ஜிஎஸ்பி சேவா மண்டல் (GSB Seva Mandal) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலும் படிக்க | ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர்: ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!

69 கிலோ தங்கம் மற்றும் 336 கிலோ வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட சிலை 
GSB சேவா மண்டலத்தால் மும்பையின் பணக்கார கணபதி விநாயக சதுர்த்திக்காக நிறுவப்பட்டது. GSB கணபதி சிலை இந்த ஆண்டு 69 கிலோ தங்கம் மற்றும் 336 கிலோ வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் தங்கப் பிள்ளையாரை தரிசனம் செய்யுங்கள்...

ஜிஎஸ்பி சேவா மண்டலின் விநாயகர், மும்பை கிங்ஸ் சர்க்கிளில் அமைந்துள்ளது. Navsala Pavnaara Vishwacha Raja (பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கடவுள்) என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள். இங்கு கணபதி பாப்பா மோரேயா! என்ற முழக்கங்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கணபதிக்கும் காப்பீடு

ஆனால், கடவுளாக இருந்தாலும் கலிகாலத்தில் அவருக்கும் இன்சூரன்ஸ் அவசியம். ஜிஎஸ்பி சேவா மண்டல் பிள்ளையார் 69 கிலோ தங்கம் மற்றும் 336 கிலோ வெள்ளியில் உருவாக்கபட்டிருப்பதால், சிலை 360.45 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மண்டலின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்பி சேவா மண்டல் என்பது, கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரே கணபதி மண்டல் ஆகும்.  இங்கு பூஜை, சேவை மற்றும் அன்னதானம் ஆகிய சடங்குகள் இடைவிடாமல் 24 மணி நேரமும் தொடர்கிறது என்பதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகரை நேரில் சென்று தரிசிக்கலாம்.

தங்க கணபதியை தரிசிக்க எப்படி செல்வது?

மும்பையின் மேற்குப் பாதையில் இருந்து பயணிப்பவர்கள், தாதர் நிலையத்தில் இறங்கி, மத்தியப் பாதையிலிருந்து சியோனுக்கு ரயிலில் செல்லவும். அருகிலுள்ள ரயில் நிலையம் ஜிடிபி நகர் ரயில் நிலையம் ஆகும்.
 
சாலை மார்க்கமாக வழி

தாதரில் இருந்து வருபவர்களுக்கு டாக்ஸி வழியாக வருவது சரியாக இருக்கும். தானேயில் இருந்து வருபவர்கர்ளுக்கு கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உகந்ததாக இருக்கும். ட்ராஃபிக் மற்றும் பொருத்தமான வழியைப் பார்க்க, Google வரைபடத்தைப் பயன்படுத்தவும்.

தங்கப்பிள்ளையாரின் முகவரி

குரு கணேஷ் சேவா மண்டல் முகவரி: பூகைலாஷ் நகர், சியோன் கோட்டைக்கு அருகில், சியோன் ஈஸ்ட், சியோன், மும்பை - 400022

மேலும் படிக்க | பிள்ளையார் சுழி போட்டால் வெற்றி நிச்சயமா..? ‘உ’ எழுத்திற்குள் இருக்கும் ஆன்மிக அர்த்தம்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News