உங்கள் வாழ்வில் வரும் அனைவரும் உங்களுக்கு நண்பர்களாகி விட மாட்டார்கள். சிலர், உங்கள் வாழ்வில் கெட்ட விஷயங்களை தினிப்பதற்கென்றே வருவார்கள். இவர்களால் எப்போதும் நம் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படாது. இவர்களை வாழ்வில் இருந்து தள்ளி வைப்பதால் கண்டிப்பாக நம் மன நலத்திற்கு மிகவும் நல்லது. இங்கு குறிப்பிடப்படும் 4 பேரை மட்டும் உங்கள் வாழ்வில் இருந்து கட்டாயம் விளக்கி வையுங்கள். அவர்கள் யார் யார் தெரியுமா?
டாக்ஸிக் ஆன நபர்கள்:
தனக்கு மட்டுமன்றி தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் தீய விஷயங்களை செய்பவர்களை டாக்ஸிக் (Toxic person) ஆன நபர்கள் என்று கூறுவர். இவர்கள், உங்கள் வாழ்வில் நெகடிவ் விஷயங்களை தவிர வேறு எதையும் கொண்டு வர மாட்டார்கள். ஒருவரின் மன நலனை கெடுப்பது, உணர்ச்சிகளை மதிக்காமல் இருத்தல், ஏமாற்றுதல் போன்ற விஷயங்களை இவர்கள் செய்வர். இவர்களுடன் இருப்பவர்களுக்கு, காரணமே தெரியாமல் சோகமாக இருக்கும், தான் தவறாக நடத்தப்படுவது போல தோன்றும். அதனால், இது போன்ற நபர்களை உங்களது வாழ்வை விட்டு தள்ளி வையுங்கள்.
1.உங்களை உங்களுக்கே தெரியாமல் கையாளுபவர்கள்..
சிலருக்கு பிறரை ஏமாற்றி, தங்களுக்கான விஷயக்களை அவர்கள் மூலமாக செய்து கொள்வர். இவர்களுக்கு பிறரை கையாளும் திறன் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களை அவர்களது சுய புத்தியுடன் இவர்கள் நடந்து கொள்ள விட மாட்டார்கள். பிறரை கண்ட்ரோல் செய்யவதால் இவர்களுக்கு அதீத இன்பம் கிடைக்கும். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஸ்மார்ட் ஆனவர்களாக இருப்பர். இதனால் இவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு இவர்கள் தங்களை கையாளுகிறார் என்பதே தெரியாது. அதனால், இது போன்ற நபர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள்.
2.அடிக்கடி பொய் கூறுபவர்:
ஒரு சிலர், சரளமாக தங்கு தடையின்றி பொய் கூறுவர். இவர்கள், தங்களை ஒரு சூழ்நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ள பொய் கூற தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு யாரிடமும் நேர்மையாக இருக்க தெரியாது. இவர்களுடன் நண்பர்களாகவே இருக்கவே நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டும். இவர்களே முயற்சித்தாலும் பொய் கூறுவதை இவர்களால் தடுக்க முடியாது. எனவே, ஒருவர் உங்களிடம் பொய் கூறுகிறார் என்று தெரிந்து விட்டால் அவர்களிடம் இருந்து தள்ளியிருப்பது நல்லது.
3.தன்னை மட்டும் முன்னுரிமை அளித்து கொள்பவர்:
எந்த இடத்திற்கு சென்றாலும், யாருடன் இருந்தாலும் தனது உணர்ச்சிகள் மற்றும் தான் யோசிக்கும் விஷயங்கள் மட்டுமே மேலோங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பர். இவர்களால் பிறர் என்ன யோசிக்கின்றனர், தன்னால் அவர்களுக்கு துன்பம் நேர்கின்றதா இல்லையா என்பதை புரிந்து கொள்ள முடியாது. இந்த குணாதிசயத்தை கொண்டவர்கள், உணர்வு ரீதியாக பிறரை துன்புறுத்தவும் செய்வர். மன நலனை பேணிக்காக்க விரும்புபவர்கள், கண்டிப்பாக இது போன்ற நபர்களிடம் இருந்து தள்ளியிருக்க வேண்டும்.
4.டிராமாவை விரும்புபவர்கள்:
சிலருக்கு, அவரவர் வாழ்க்கையை விட பிறர் வாழ்வில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதனால், அமைதியாக சென்று கொண்டிருக்கும் சிலர் வாழ்க்கையிலும் கொளுத்தி போட்டு ஏதேனும் பிரச்சனையை கிளப்புவர். இவர்கள் இருக்கும் இடத்தில் சர்ச்சைகளும், சண்டைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இவர்களுடன் இருப்பவர்கள், தங்கள் வாழ்வில் நிம்மதியை தேடுவது கடினம். அதனால், கண்டிப்பாக இது போன்ற நபர்களை உங்களது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும்.
மேலும் படிக்க | உங்கள் உறவு Toxic ஆக மாறுதா...? - இந்த அறிகுறிகளை உடனே கவனியுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ