Why Men Like Older Women : காதல் என்பது, யுனிவர்ஸல் மொழியாகும். காணாமல் காதல், கண்டவுடன் காதல், பார்க்க பார்க்க காதல் என பல வகையான காதல் இருக்கிறது. நாம் பேசும் மொழி ஒருவருக்கு புரியவில்லை என்றாலும் கூட, காதல் மொழி அவர்களுக்கு புரிந்து விடும். இப்படி, காதல் கண்கள், காதுகள் இல்லாதது போல வயதும் ஒரு பொருட்டாக இருப்பதில்லை.
வயது மூத்த பெண்களும் ஆண்களும்..
காதலர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான பெண்கள் தன்னை விட வயது அதிகமான ஆண்களை காதலித்து கொண்டிருப்பர். இதற்கு காரணம், பாதுகாப்பு உணர்வு மற்றும் அதிகாரம் ஆகியவற்றை இன்னொருவரிடம் இருந்து அவர்கள் எதிர்பார்ப்பதால், அது போன்றவர்களை பார்த்தவுடன் காதலில் விழுகின்றனர். அனைத்து திருமண உறவுகளை எடுத்து பார்த்தாலும் அதில் ஆண் தான் பெண்ணை விட வயது அதிகமானவராக இருப்பார். ஆனால், ஒரு சில ஆண்களுக்கு தன்னை விட வயது அதிகமான பெண்களை பிடிக்கும்.
சில படங்களில் சீனியர் அக்காவை ஜூனியர் பையன் காதலித்து டேட்டிங் செய்வதையும் பார்த்திருப்போம். இது ஏன் என்று நம்மில் பலருக்கு புரியாது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
அறிவு முதிர்ச்சி:
ஒரு சில ஆண்களுக்கு, தன்னை விட வயது முதிர்ந்த பெண்கள் அறிவில் முன்னோடியாக இருப்பது பிடிக்கும். தன்னால் கையாள முடியாத விஷயங்களை கூட, அவர்கள் கையாள்வதை பார்த்து அவர்கள் கவரப்படுகின்றனர். இதனால், அவர்கள் தன்னை விட வயது அதிகமான பெண்களால் கவரப்படுகின்றனர். பொதுவாகவே, ஆண்களை விட பெண்களுக்கு அறிவு முதிர்ச்சி அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, தன்னை விட அறிவில் தேர்ந்த பெண்களை பார்த்து ஆண்கள் எப்போதும் ஈர்க்கப்படுவர்.
மேலும் படிக்க | ஒன் சைட் லவ்வை டபுள் சைடாக மாற்றுவது எப்படி? ஈசியான காதல் டிப்ஸ்!
தன்னம்பிக்கை:
வயது அதிகமான பெண்களுக்கு, தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதனாலேயே ஆண்கள் பலர் அவர்களால் ஈர்க்கப்படுவர். அதே போல, தன்னம்பிக்கை அதிகமான பெண்களை யாராலும் பயமுறுத்தவும் முடியாது. இதுவும் ஆண்களை கவரும் தன்மை ஒன்றாகும். தன்னம்பிக்கை நிறைந்த பெண்களுக்கு, பிற பெண்கள் மீது பொறாமையும் இருக்காது. இந்த குணம் இல்லை என்றாலே, அவர்களின் பின்னாள் ஆண்கள் லைன் கட்டி நிற்பார்கலாம்.
சுதந்திரம்:
சுதந்திரம் என்பது அனைவராலும் வேண்டப்படும் மற்றும் விரும்பப்படும் ஒன்றாகும். வயது அதிகமான பெண்கள், சுதந்திர உணர்வுடன் இருப்பர். இதுவும், ஆண்களை அதிகமாக ஈர்க்கும். இந்த சுதந்திர உணர்வு, அவர்களுக்கு எந்த கட்டுக்கோப்பையும் வைக்காது. தான் நினைத்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களுக்கு அளிக்கும். எனவே, சுதந்திரம் இருக்கும் பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவர்.
உணர்ச்சி திறன்:
ஒரு சிலர், தாங்கள் என்ன உணர்கிறோம், எப்படி உணர்கிறோம் என்ற அறிவே இல்லாமல் இருப்பர். வயது அதிகமான பெண்களுக்கு இந்த உணர்ச்சி திறன் அதிகமாக இருக்கும். அவர்களால், எந்த கடினமான தருணத்தையும கூட தாங்கிக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. எனவே, இப்படி தங்களின் உணர்ச்சிகள் குறித்து தெரிந்து வைத்திருப்பவர்களை பார்க்கும் போது ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களுக்குமே கூட வசீகரமாக இருக்கும்.
மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ