உத்தரபிரதேசத்தில் ஆச்சரியம்..!! இராவணன் தான் எங்களுக்கு ஹீரோ; ராமர் அல்ல

தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் இல்லாத இந்த கிரேட்டர் நொய்டா கிராமத்தில் இராவணன் ஒரு ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2019, 07:41 PM IST
உத்தரபிரதேசத்தில் ஆச்சரியம்..!! இராவணன் தான் எங்களுக்கு ஹீரோ; ராமர் அல்ல  title=

புதுடெல்லி: பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்ட நிலம் தான் இந்தியா. அதனால் தான் இந்தியாவை துணை கண்டம் என்று அழைக்கிறோம். நமது வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து பல்வேறு புராணங்கள் உள்ளன. இந்தியாவில் மனிதநேயத்தையும் ஒற்றுமையையும் கொண்டாடும் பல விழாக்கள் உள்ளன. வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற நாளை "ராம்லீலா" என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் தசரா பண்டிக்கை கொண்டாடுப்படும் வேலையில், கடவுள் ராமனுக்கு பதிலாக இராவணனை கொண்டாடும் ஒரு கிராமம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தசரா அல்லது விஜயதசமி அனைவரும் கொண்டாடும் சமயத்தில், இராவணன் ஹீரோ என்றும், இங்கு ராமர் வணங்கப்படுவதில்லை என்றும் புகழப்படும் ஒரு இடத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாக தசரா கொண்டாடப்படுகிறது. ராமாயணத்தில் அசுரன் என அழைக்கப்பட்ட இராவணனை, கடவுள் ராமன் கொன்றார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் பிஸ்ராக் என்ற கிராமத்தில் இராவணன் ஹீரோ இருக்கிறார். ராமன் அல்ல என்பதை கூறிக்கொள்கிறோம்.

இந்த கிராமத்து மக்கள் ராவணன் இங்கு தான் பிறந்தார். பின்னர் அவர் தங்க நகரமான இலங்கையை ஆட்சி செய்தார் என்று நம்புகிறார்கள். இதனால் பிஸ்ராக் மக்கள் ராவணனை வணங்குகிறார்கள். நமது நாட்டில் இராமன் இராவணனைக் கொன்றதை தசரா பண்டிக்கை மூலம் கொண்டாடப்படுவதை, இந்த கிராம மக்கள் துக்கப்படுகிறார்கள்.

தசரா மற்றும் தீபாவளி திருவிழாக்களிலும் அவர்கள் இராவணனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்தியா முழுவதும் பத்து தலை கொண்ட ராவணின் உருவ பொம்மைகளை எரித்து கொண்டாடப்படுகிறது. 

உள்ளூர் புராணங்களின்படி, விஸ்ராவஸ் மற்றும் கைகேசி ஆகியோருக்கு ராவணன் பிறந்தார். அவர் புலஸ்தியாவின் பேரன். கிராமத்துக்கு "பிஸ்ராக்" என்ற பெயரை இராவணனின் தந்தையான விஸ்ராவஸ் சூட்டியதாகவும், அவர் தனது குழந்தைப் பருவத்தை கூட கிராமத்தில் கழித்தார் என்று நம்பப்படுகிறது. மேலும் நவராத்திரி பண்டிகையின்போது சிவபெருமானின் லிங்க வடிவத்தில் இருக்கும் இராவணனுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

Trending News