ரேஷன் கார்டு புதிய விதிகள்: இன்றே இதை செய்யுங்கள்; இல்லையெனில் சிக்கல் தான்

இலவச ரேஷன் பெற தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள், கார்டை ஒப்படைக்கவோ அல்லது ரத்து செய்யவோ வேண்டும் என அரசு கூறியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2022, 05:39 PM IST
  • கொரோனா தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் முறையை அரசு தொடங்கியது.
  • உணவு துறையின் நடவடிக்கை.
  • அரசின் இலவச ரேஷனை பல லட்சம் தகுதியில்லாதவர்களும் பயன்படுத்தி வருவதாக தகவல்.
ரேஷன் கார்டு புதிய விதிகள்: இன்றே இதை செய்யுங்கள்; இல்லையெனில் சிக்கல் தான் title=

ரேஷன் கார்டு புதிய விதிகள்: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தியை கண்டிப்பாக படிக்கவும்.  கொரோனா தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷன் முறையை அரசு தொடங்கியது. ஆனால்  அரசின் இலவச ரேஷனை பல லட்சம் தகுதியில்லாதவர்களும் பயன்படுத்தி வருவது அரசின் கவனத்துக்கு வந்தது.

உணவு துறையின் நடவடிக்கை

இதற்காக,  தகுதியில்லாமல் ரேஷன் கார்டை வைத்திருக்கும் நபர், தாமாகவே முன் வந்து அதனை ஒப்படைத்து, ரத்து செய்ய வேண்டும் என, அரசு சார்பில், மக்களிடம் கூறப்பட்டுள்ளது. ரேஷன் கார்டை தாமே முன் வந்து ரத்து செய்யாத நிலையில், அரசு மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையில் சிக்கினால், பிறகு உணவுத் துறை துறை அதை ரத்து செய்யும் என்பதோடு அப்படிப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.

மேலும் படிக்க | Ration Card: மக்களே உஷார், இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது

புதிய விதிகள் 

கார்டு வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் ப்ளாட்/ஃப்ளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம்/டிராக்டர், ஆயுத உரிமம் ஆகியவற்றை வைத்திருந்தாலோ, குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சம் என்ற அளவிலும், நகரத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, அவர்கள் இலவச ரேஷன் பெற தகுதியானவர்கள் இல்லை. அவர்கள் தங்கள் ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை

அரசு விதிகளின்படி, ரேஷன் கார்டுதாரர் அட்டையை ஒப்படைக்கவில்லை என்றால், ஆய்வுக்குப் பிறகு, அத்தகையவர்களின் அட்டை ரத்து செய்யப்படும். இதனுடன், அந்த குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும். அதுமட்டுமின்றி, அப்படிப்பட்டவர்களிடம் ரேஷன் பெற்றதற்கான பணமும் வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News