ரயில்வேயில் வேலை, +2 படித்திருந்தால் போதும்: இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

Railway Recruitment 2022: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SECR இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான secr.indianrailways.gov.in -க்கு சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2022, 01:13 PM IST
  • ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு வேலைக்கான ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது.
  • இந்த ஆட்சேர்ப்பின் கீழ் 21 காலியிடங்கள் நிரப்பப்படும்.
  • ஆட்சேர்ப்பு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் செய்யப்படுவதால், விண்ணப்பதாரர்கள் விளையாட்டுத் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
ரயில்வேயில் வேலை, +2 படித்திருந்தால் போதும்: இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவும் title=

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு வேலைக்கான ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR) விளையட்டு கோட்டாவின் (ஸ்போர்ட்ஸ் கோட்டாவின்) கீழ் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SECR இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான secr.indianrailways.gov.in -க்கு சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:

இந்த ஆட்சேர்ப்பின் கீழ் 21 காலியிடங்கள் நிரப்பப்படும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 5 மார்ச் 2022ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி? 

லெவல் 2 மற்றும் 3 பதவிகளுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன், இந்த ஆட்சேர்ப்பு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் செய்யப்படுவதால், விண்ணப்பதாரர்கள் விளையாட்டுத் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். 

இது தவிர, லெவல் 4 மற்றும் லெவல் 5 பதவிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற பட்டதாரியாக இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கும் விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட விளையாட்டுத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு சாதனைகள் மற்றும் கல்வித் தகுதிகளை மதிப்பீடு செய்த பிறகே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படும். அனைத்து அம்சங்களிலும் திருப்தி அடைந்த பின்னரே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News