PPF: எஸ்பிஐயின் PPF கணக்கிலிருந்து முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற முடியுமா?

உங்கள் பணத்தை அதிகரிக்கும் பாதுகாப்பான வழிகளில் முக்கியமானது Public Provident Fund.  பொதுவாக PPF 15 வருடங்கள் lock-in காலத்துடன் வருகிறது. இந்த காலகட்டத்திற்கு இடையில் பணம் தேவைப்பட்டால் என்ன ஆகும்? எஸ்பிஐ பிபிஎஃப் கணக்கிலிருந்து முன்கூட்டியே பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2020, 10:32 PM IST
PPF: எஸ்பிஐயின் PPF கணக்கிலிருந்து முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற முடியுமா? title=

புதுடெல்லி: Public Provident Fund: நிலையான வைப்பு மற்றும் சேமிப்பு வங்கி கணக்குகளின் வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன. உலகளாவிய பல்வேறு காரணிகளால் பங்குச் சந்தைகள் நிலை குலைந்து போயிருக்கின்றன. இதுபோன்ற இக்கட்டான காலங்களில், உங்கள் பணத்தை அதிகரிக்கும் பாதுகாப்பான வழிகளில் முக்கியமானது Public Provident Fund.  பொதுவாக PPF 15 வருடங்கள் lock-in காலத்துடன் வருகிறது. இந்த காலகட்டத்திற்கு இடையில் பணம் தேவைப்பட்டால் என்ன ஆகும்? எஸ்பிஐ பிபிஎஃப் கணக்கிலிருந்து முன்கூட்டியே பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

இதுபோன்ற தொடர் கேள்விகளுக்கான பதிலை தெரிந்துக் கொள்ளலாம். PPF கணக்கு வைத்திருப்பவர் குறைந்தது ஆறு வருடங்களாவது தனது கணக்கை பராமரிக்க வேண்டும். கணக்கு தொடங்கிய ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே எஸ்பிஐ முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கிறது.

State Bank of Indiaவில் குறைந்தபட்சம் ரூ .500 என்ற தொகையுடன் PPF கணக்கு தொடங்கலாம். பிபிஎஃப் வைப்புக்கான அதிகபட்ச வரம்பு ஆண்டுக்கு  1,50,000 ரூபாய் ஆகும். பிபிஎஃப் கணக்கிற்கான அசல் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். கணக்கு வைத்திருப்பவர் ஒரு விண்ணப்பம் கொடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

காலாண்டு அடிப்படையில் PPF கணக்குக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தீர்மானிக்கிறது. எஸ்பிஐ வலைத்தளத்தின்படி 01.10.2019 முதல் ஆண்டுக்கு 7.90% வட்டி கொடுக்கப்படுகிறது.  

கணக்குத் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதைப் பொறுத்து PPF கணக்கில் இருந்து கடன் எடுப்பது மற்றும் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான  அனுமதி வழங்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 88 இன் கீழ் வருமான வரி சலுகைகள் PPF கணக்கிற்கு கிடைக்கிறது.

Read Also | UIDAI: குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான முக்கிய விதிகள்..!!!

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை PPF கணக்கிற்கு nomineeயாக நியமிக்கும்   வசதி உள்ளது. அப்படி nomineeயாக நியமிக்கப்பட்டவர்களின் உரிமை விகிதம் என்ன என்பதை சதவிகித அடிப்படையில் கணக்கு வைத்திருப்பவரே முடிவு செய்யலாம். கணக்குக் வைத்திருப்பவரின் வேண்டுகோளின் பேரில் பி.பி.எஃப் கணக்கை வேறு கிளைகள் / பிற வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்கு மாற்றலாம். இந்த சேவை இலவச சேவையாகும். கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.   

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News