இந்த 3 ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றத்தால் சிறப்ப்பாக இருக்கும்

ஜோதிடத்தின்படி, சனிபகவான் ராசியை மாற்றும் போதெல்லாம், சில ராசிக்காரர்களுக்கு சுப, அசுப தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 12:38 PM IST
  • வாழ்க்கைத்துணையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும்
  • பழைய நோய்களில் இருந்து விடு படலாம்
  • தினசரி வருமானம் அதிகரிக்கும்
இந்த 3 ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றத்தால் சிறப்ப்பாக இருக்கும் title=

நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் சனி கிரகம். கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார். கர்மவினை அளிப்பவராகிய சனி பகவான் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேத்து ஜூன் 4 வரை நீடிப்பார். பின்னர் ஜூன் 4 முதல், கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். சனியின் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை அபரிமிதமாக மாறும். அவர்களின் விவரத்தை காண்போம்.

கடகம்: வேலையில் வெற்றி உண்டாகும். இதனுடன் தினசரி வருமானமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து மனம் மகிழ்ச்சியடையாமல் இருக்கும். சனி பகவான் உங்களுக்கு சில பிரச்சனைகளை உருவாக்குவார்.

மேலும் படிக்க | கம்யூனிஸ்ட் நாட்டில் சிவராத்திரி! 1000 ஆண்டு பழமையான சிவ வழிபாடு!

சிம்மம்: சனிபகவான் சிம்ம ராசியில் ஏழாவது வீட்டிற்குள் நுழைவார். ஏழாவது வீடு கடன், எதிரிகள் மற்றும் திருமண வாழ்க்கையின் காரணியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தந்தை பாதிக்கப்படலாம். இது தவிர, மனக் கவலை எற்படலாம். வீடு, வாகனச் செலவுகள் அதிகரிக்கும். தினசரி வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். நோய், கடன், எதிரிகளால் மனக் கவலை உண்டாகும்.

கன்னி: சனிபகவான் கன்னி ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவார். ஐந்தாவது வீடு அறிவு, குழந்தைகள், அறிவுசார் திறன் ஆகியவற்றின் காரணியாகும். இந்த சனி மாற்றத்தால் பாதம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். இதனுடன், கண்கள் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News