PPF vs EPF: உங்களுக்கு ஏற்ற திட்டம் எது? எதில் அதிக வருமானம்?

PPF vs EPF: இபிஎஃப் என்பது சம்பளம் பெறும் நபர்களுக்கான ஓய்வூதிய நன்மைத் திட்டமாகும். இந்த திட்டத்தில், நிறுவனம் மற்றும் பணியாளர் இருவரும் பங்களிக்கின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2023, 06:47 PM IST
  • PPF vs EPF: யார் முதலீடு செய்யலாம்.
  • PPF vs EPF: குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?
  • PPF vs EPF: வரி விதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
PPF vs EPF: உங்களுக்கு ஏற்ற திட்டம் எது? எதில் அதிக வருமானம்? title=

PPF vs EPF: வாழ்க்கையை வசதியாகவும் பதற்றமின்றியும் கடந்து செல்ல, நீங்கள் வாழும் வரை உங்கள் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் அமைதி தேவை, மற்றும் அமைதிக்கு நிதி ரீதியாக தன்னிறைவு பெறுவதும் அவசியம். ஆகையால், நீங்கள் எப்போது ஒரு வேலையைத் தொடங்குகிறீர்களோ, அதனுடன் உங்கள் ஓய்வூதியத் திட்டத்தையும் தொடங்குங்கள். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆகியவை அரசாங்கத்தால் வழங்கப்படும் இரண்டு திட்டங்கள் ஆகும்.

இவை ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கான சிறந்த வழிகளாக உள்ளன. இபிஎஃப் என்பது சம்பளம் பெறும் நபர்களுக்கான ஓய்வூதிய நன்மைத் திட்டமாகும். இந்த திட்டத்தில், நிறுவனம் மற்றும் பணியாளர் இருவரும் பங்களிக்கின்றனர். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) இந்த நிதியை நிர்வகிக்கிறது. அதேசமயம், பிபிஎஃப் என்பது அனைத்து தனிநபர்களுக்கும் வயதான காலத்தில் நிதி பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

PPF vs EPF: யார் முதலீடு செய்யலாம்

சம்பளம் பெறும் தனிநபர் அதாவது சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே இபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மறுபுறம், எந்தவொரு தனிநபரும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இபிஎஃப் மீதான வருடாந்திர வட்டி விகிதம் தற்போது 8.1 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், டிசம்பர் காலாண்டில் பிபிஎஃப் மீதான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக அரசாங்கம் வைத்திருக்கிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு அப்ளை பண்ணா இனி உடனே கிடைக்கும்.! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

PPF vs EPF: குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

குறைந்தபட்சம் 500 ரூபாய் கொண்டு பிபிஎஃப் -இல் கணக்கு தொடங்கலாம். அதேசமயம், இபிஎஃப்- இல், அடிப்படை சம்பளத்தின் 12% பங்களிப்பு இருக்கும். இதில், ஊழியர் மற்றும் நிறுவனம் இரு தரப்பும் 12 சதவீத பங்களிப்பை வழங்குகின்றனர். ஓய்வு பெறும்போது அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது (ராஜினாமா) இபிஎஃப்- இலிருந்து இந்த தொகையை திரும்பப் பெறலாம். அதேசமயம், பிபிஎஃப் -க்கு 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. இதை 5 ஆண்டுகள் பிளாக்கில் மேலும் நீட்டிக்க முடியும்.

PPF vs EPF: வரி விதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்

3 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பிபிஎஃப் கணக்கில் கடன் பெறலாம். அதே நேரத்தில், மருத்துவ அவசரநிலை, வீடு, குழந்தை கல்வி போன்ற சிறப்பு சூழ்நிலைகளுக்கு இபிஎஃப் கணக்கிலிருந்து கடன் பெறலாம். பிபிஎஃப் -ல் பணம் எடுப்பதற்கு வரி இல்லை, அதேசமயம் இபிஎஃப் -ல் 5 ஆண்டுகளுக்கு முன் பணம் எடுத்தால் வரி செலுத்த வேண்டியிருக்கும். அதே நேரத்தில், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ், பிபிஎஃப் மற்றும் இபிஎஃப் ஆகியவற்றில் ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீட்டில் வரி விலக்கு கோரலாம்.

மேலும் படிக்க | ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: இனிப்பான செய்தி கொடுத்த மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News