மாதம் ரூ.4950 வருமானம், எதில் முதலீடு செய்யணும்!

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு 6.6% வட்டி தருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2021, 01:53 PM IST
மாதம் ரூ.4950 வருமானம், எதில் முதலீடு செய்யணும்! title=

Post Office Schemes: வங்கிகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை தருவது போலவே தபால் நிலையங்களிலும் நிறைய சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு 6.6% வட்டி தருகிறது. 

தபால் கணக்கில் மாதாந்திர வருமான திட்டத்தில் (Post Office) ரூ. 4.5 லட்சம் முதலீடு செலுத்தியிருந்தால் ஒரு வருடத்தில் உங்களுக்கு ரூ. 29,700 வரை வட்டி கிடைத்திருக்கும். அதே போன்று கூட்டு சேமிப்பில் நீங்கள் ரூ. 9 லட்சம் செலுத்தியிருந்தால் உங்களுக்கு வருடாந்திர வட்டி 59,400 கிடைத்திருந்திருக்கும். அதாவது நீங்கள் மாதத்திற்கு ரூ. 4950-ஐ வருமானமாக பெற்றிருக்கலாம்.

ALSO READ | Post Office RD: போஸ்ட் ஆபிஸில் உங்களுக்கு RD கணக்கு இருக்கா? அப்போ கொண்டாட்டம் தான்

நீங்கள் கணக்கு துவங்கிய நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் நீங்கள் உங்களின் வட்டியை பெற்றுக் கொள்ளலாம். தனியாக ஒருவர் இந்த கணக்கை துவங்க முடியும். அல்லது மூன்று பேர் இணைந்து கூட்டு கணக்கினை துவங்கலாம். 

கணக்கை எவ்வாறு துவங்குவது?
*தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைக்கவில்லை என்றால் புதிதாக ஒன்றை துவங்க வேண்டும்.
*ஏற்கனவே சேமிப்பு கணக்கை வைத்திருந்தால் மாதாந்திர வருமான சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான பாரத்தை வாங்கி அதில் உங்களின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த மாதாந்திர சேமிப்பு திட்டத்தினை குழந்தைகளுக்கு தொடங்குகிறீர்கள் எனில், அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலரின் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இருப்பினும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகாள் வர மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கபப்டும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News