PM Kisan Yojana: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ .6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் என மூன்று தவணை மூலம் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் தொடக்கத்தில், திட்டத்தின் ஆறாவது தவணையை அரசாங்கம் வெளியிட்டது.
இப்போது அடுத்த தவணையை (PM Kisan Seventh Installment) அதாவது ஏழாவது தவணையை வெளியிட மத்திய அரசாங்கம் தயாராகி வருகிறது. தவணையை பெறுவதற்கு முன், விவசாயிகள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயங்களை அவர்கள் சாதாரணமாக நினைத்து புறக்கணித்தால், அவர்களின் தவணை கிடைக்காமல் போக வாய்ப்பி இருக்கிறது.
அதேபோல தான் பயனாளர்கள் பட்டியலில் பல விவசாயிகள் உள்ளனர். ஆனால் ஆறாவது தவணை அவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஏனென்றால், அவர்களின் விண்ணப்பத்தில் சில தவறுகள் இருந்தன, அத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய தவணையை நிறுத்தி வைக்கிறது. உதாரணமாக, யாராவது தவறான ஆதார் (Aadhaar) எண்ணைக் கொடுத்திருந்தாலோ, ஒருவர் வங்கி கணக்கு எண்ணை தவறாக அளித்திருந்தாலோ அவர்களுக்கு தவணை கிடைக்காது.
ALSO READ |
விவசாயிகளுக்கு நல்ல செய்தி..!! PM Kisan Yojana மூலம் ஆண்டுக்கு 6000 ரூபாய் பெறுவது எளிது
PM Kisan Yojana: மொபைலில் இருந்து எப்படி விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை
PM கிசான் சம்மன் நிதி திட்டம்: உங்களுக்கு ₹ 2000 கிடைக்கும்.. ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
இதுபோன்ற சூழ்நிலையில், தவணையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற நீங்கள் விண்ணப்பித்திருந்தால், உங்களுக்கு எந்தவித சிக்கலும் வராமல் இருக்க தவறுகளை சரிசெய்யவும்.
சில குறைபாடு காரணமாக உங்கள் முந்தைய தவணை கிடைக்க வில்லை மற்றும் அடுத்த தவணையில் பணம் ஒன்றாக வாங்க விரும்பினால், நீங்கள் தவறுகளை சரிசெய்ய வேண்டும். இந்த திட்டத்தை நன்மையை பயன்படுத்திக் கொள்ள ஆதார் அட்டையின் சரிபார்ப்பு கட்டாயமாகும். ஆதார் அட்டை சரிபார்ப்பு செய்யப்படாத பல விவசாயிகள் உள்ளனர். ஒருமுறை உங்கள் கணக்கில் pmkisan.gov.in சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.