பிரதமர் காப்பீட்டுத் திட்டம்; 7 ஆண்டுகளுக்கு பின் பிரீமியத்தில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல்

மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களான பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பிரீமியம் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 1, 2022, 01:09 PM IST
  • ஏழைகளிலும் ஏழையாக இருப்பவர்கள், நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய்க்கும் குறைவாக செலுத்தி, ரூ.2,00,000 ஆயுள் காப்பீடு பெறமுடியும்.
  • இந்தியாவை முழு காப்பீட்டு சமூகமாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை.
பிரதமர் காப்பீட்டுத் திட்டம்; 7 ஆண்டுகளுக்கு பின் பிரீமியத்தில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல் title=

மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களான பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பிரீமியம் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகியவற்றின் பிரீமியம் கட்டணங்கள் 1 ஜூன் 2022 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 7 ஆண்டுகளுக்கு முன்பு 2015 இல் இரண்டு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல் முறையாக பிரீமியம் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. 

இரண்டு திட்டங்களுக்கும் பிரீமியம் தொகை ஒரு நாளைக்கு ரூ.1.25 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது PMJJBY ரூ.330ல் இருந்து ரூ.436 ஆகவும், PMSBY ரூ.12ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | இபிஎஃப் கணக்கில் புதிய நாமினேஷனை தாக்கல் செய்வது எப்படி? 

பிரீமியம் விகிதங்களில் மாற்றம்

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்னும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PMJJBY) மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்னும் (PMSBY) பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதற்காக, திட்டங்களின் பிரீமியம் விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இரண்டு திட்டங்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ.1.25 பிரீமியம் செலுத்தி இது திருத்தப்பட்டுள்ளது. இதில் PMJJBY (பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா) ரூ.330லிருந்து ரூ.436 ஆகவும், பிஎம்எஸ்பிஒய் (பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா) ரூ.12ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதற்கு பின், இதுவரை 12,76  கோடி பேர் இதில் பதிவு செய்துள்ளனர். 5,76,121 பேரின்  குடும்பங்கள்   இந்தத் திட்டத்தின் கீழ், பணப்பலனாக ரூ.11,522 கோடியை  உரிமை கோரி பெற்றுள்ளன. பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 28.37 கோடி பேர், பதிவு செய்துள்ளனர். 97,227 உரிமை  கோறல்களுக்கு ரூ.1,930 கோடி வழங்கப்பட்டுள்ளது. 4 கோடிக்கும் அதிகமானோர் அடல் ஓய்வூதியதித் திட்டத்தின் கீழ் சந்தா செலுத்தியுள்ளனர் என்று திருமதி நிர்மலா சீதாராமன்  இம்மாத தொடக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம் 8 மடங்கு உயரும்!

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஏழைகளிலும் ஏழையாக இருப்பவர்கள். நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய்க்கும் குறைவாக செலுத்தி, ரூ.2,00,000 ஆயுள் காப்பீடு  பெறமுடியும். பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய்க்கும் குறைவாக செலுத்தி, ரூ.2,00,000 விபத்து காப்பீடு பெறமுடியும். 

PMJJBY மற்றும் PMSBY ஆகியவற்றின் உரிமைகோரல்களின் அளவுகளை கருத்தில் கொண்டு, அவற்றை செயல்படுத்தும் காப்பீட்டாளர்களுக்கு உதவும் வகையில், PMJJBY மற்றும் PMSBY இன் பிரீமியம் விகிதங்கள் ஜூன் 1 முதல் திருத்தப்பட்டுள்ளன. இது மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் இத்திட்டங்களை செயல்படுத்த ஊக்குவிக்கும்.

இந்தியாவை முழு காப்பீட்டு சமூகமாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, அடுத்த ஐந்து ஆண்டுகளில் PMJJBY காப்பீடு எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கை 6.4 கோடியில் இருந்து 15 கோடியாகவும், PMSBY திட்டத்தின் கீழ் பயனாளிகளை 22 கோடியில் இருந்து 37 கோடியாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க |எல்பிஜி சிலிண்டர் மானியம்; புதிய விதிகளை அறிந்து கொள்ளவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News