வாழ்க்கை வண்ணமயமாய் மாற கிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்

கிரகங்களின் ஆசி அதிகமாக கிடைக்கவும், அசுப பலன்கள் குறையவும் அந்தந்த கிரகங்களுக்கு தொடர்புடைய வண்ணங்களை பயன்படுத்துவது நன்மையைத் தரும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 10, 2022, 06:38 AM IST
வாழ்க்கை வண்ணமயமாய் மாற கிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள் title=

புதுடெல்லி: கிரகங்களில் சூரியன், சந்திரன், புதன், வியாழன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சுப பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது. சனி, ராகு கேது ஆகியவை அசுப கிரகங்களாக கருதப்படுகின்றன. 

கிரகங்களின் ஆசி (Zodiac Sign) அதிகமாக கிடைக்கவும், அசுப பலன்கள் குறையவும் அந்தந்த கிரகங்களுக்கு தொடர்புடைய வண்ணங்களை பயன்படுத்துவது நன்மையைத் தரும்.

கிரகங்கள் மற்றும் வண்ணங்களின் கலவையானது வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகத்திற்கு ஏற்ப வண்ணங்களைப் பயன்படுத்தினால், உங்கள் ஜாதகம் வலுவடைகிறது. இதன் காரணமாக கிரகங்களின் பாதகமான நிலை வாழ்க்கையை பாதிக்காது.

நல்ல நேரமாக இருந்தாலும், கிரகங்களுக்கு ஏற்ற வண்ணங்களை பயன்படுத்தும்போது அவை மேலும் அதிக நன்மைகளை செய்கின்றன. 

ALSO READ | இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க

எனவே, எந்த கிரகத்திற்கு எந்த நிறங்கள் சுபமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சூரியன் - சிவப்பு நிறம் சூரியனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இது தவிர செம்பு போன்ற நிறமும் சூரிய கிரகத்திற்கு உகந்தது.

சந்திரன் - வெள்ளை மற்றும் வெளிர் நிறங்கள் சந்திர கிரகத்தின் சுப பலன்களுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. இந்த நிறத்தின் சக்தியால் மன அமைதியும், மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்படுகிறது.

செவ்வாய் - இந்த கிரகத்தின் மங்கள நிறம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு. இ 

சனிக்கிழமை நீலம் அல்லது கறுப்பு. நாளுக்கேற்ற உடை அணிவதால் மன சஞ்சலங்கள் குறைகிறது. நிச்சயமாக இது மூடநம்பிக்கை இல்லை என்பது டாக்டரின் வாதம்.
புதன் - பச்சை நிறம் புதனுக்கு உகந்த நிறமாகும். புத்தி, ஆற்றல், பேசும் திறன் என பல ஆற்றல்களை பச்சை நிறம் கொடுக்கும். பிறரிடம் நட்பாக இருக்கவும் பச்சை நிறம் ஊக்குவிக்கிறது. 

வியாழன் - இந்த கிரகத்தின் மங்கள நிறம் மஞ்சள். இது தவிர, பொன் நிறமும் குருவின் கடைக்கண் பார்வையை உங்கள் மீது கொண்டுவரும். குருவின் ஆசியால் அறிவு பெருகும், மனவலிமையும் கிடைக்கும்.

சுக்கிரன்- சுக்கிரனுக்கு உகந்த நிறம் வெண்மை. வெள்ளை நிறத்தின் சக்தியால், ஒரு நபரின் ஆர்வமும், வாழ்க்கையும் நல்ல தரமானதாக இருக்கும். இது தவிர, இது திருமண வாழ்க்கையில் ஈர்ப்பை உருவாக்குகிறது.

சனி - கருப்பு நிறத்துடன் சனிக்கு தொடர்பு உள்ளது. சனியின் அசுபமான தசாபுத்தி நடைபெறும்போது, கருமை நிறத்தைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

ராகு- நீலம் இந்த கிரகத்திற்கு உகந்த நிறம். ராகு கிரகத்தின் சுப பலன்களுக்கு நீல நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது.

கேது- கேது உங்களுக்கு சுப பலன்களை கொடுக்க வேண்டுமானால், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களைப் பயன்படுத்துவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News