இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு ஜீவன் பிரமான் அல்லது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏதுவாக வீடியோ ஆயுள் சான்றிதழ் எனும் சேவையை தொடங்கியுள்ளது. இந்த வசதியின் மூலம் எஸ்பிஐ அதிகாரியிடம் ஓய்வூதியதாரர்கள் அவர்களின் சான்றிதழ்களை வீடியோ கால் மூலமாக சமர்ப்பித்து கொள்ள முடியும். மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சியிடம்(பிடிஏ) தங்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், இது ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றாகும். தற்போது எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வீடியோ லைஃப் சர்டிஃபிகேட் சேவையின் வாயிலாக ஓய்வூதியதாரர்கள் இனிமேல் எந்தவொரு வங்கி கிளைகளுக்கும் சென்று பல மணி நேரங்கள் காத்திருக்காமல் எஸ்பி செயலி அல்லது அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் அவர்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். கீழ்க்கண்ட படிநிலைகளை பின்பற்றி ஆயுள் சான்றிதழை எப்படி சமர்ப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்க | கூகுள் கொடுக்கும் ரூ.25 லட்சம் பரிசு! நீங்களும் வெல்லலாம்
1) எஸ்பிஐ-ன் அதிகாரபூர்வ பென்ஷன் சேவா இணையதள பக்கத்திற்கு செல்லவும் அல்லது பென்ஷன் சேவா எனும் செயலியை மொபைலை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும்.
2) இணையதள பக்கத்தில் மேலே உள்ள 'வீடியோஎல்சி' என்பதை க்ளிக் செய்யவேண்டும், அடுத்ததாக அதில் கீழே 'வீடியோ ஆயுள் சான்றிதழ்' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.
3) இப்போது ஓய்வூதியம் பெறும் கணக்கு எண்ணை உள்ளிட்டு பின்னர் கேப்ட்சாவை உள்ளிட்ட வேண்டும், உங்கள் ஆதார் விவரங்களை வங்கி பயன்படுத்த பாக்ஸை சரிபார்க்கவும்.
4) அதன் பிறகு கணக்கை சேர்ப்பார் என்பதை க்ளிக் செய்யவேண்டும், அடுத்ததாக உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
5) இப்போது அதில் தேவையான சான்றிதழ்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பின்னர் ப்ரொசீட் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
6) வீடியோ அழைப்பிற்கான அப்பாயின்ட்மென்டை பெற இணையதள பக்கத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உறுதிப்படுத்துதல் செய்தி அனுப்பப்படும்.
7) இப்போது உங்கள் விருப்பத்தின்படி வீடியோ காலில் இணைந்து கொள்ள முடியும்.
8) வங்கி அதிகாரியுடனான அழைப்பில் வெரிஃபிகேஷன் கோடை சரிபார்க்க வேண்டும் பின்னர் உங்கள் பான் கார்டை காண்பிக்க வேண்டும்.
9) சரிபார்ப்பு முடிந்த பிறகு, வங்கி அதிகாரி உங்களை படம்பிடிக்க ஏதுவாக நீங்கள் நன்கு நிமிர்ந்து அமர வேண்டும்.
10) இதன் பிறகு ஓய்வூதியதார்களுக்கு ஆயுள் சான்றிதழின் நிலை குறித்த செய்தி தெரிவிக்கப்படும்.
மேலும் படிக்க | வீடு வாங்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ