New Wage Code: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 3 நாட்கள் வார விடுமுறை, விதிகளில் மாற்றம்

New Wage Code: புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, சம்பளம், அலுவலக நேரம் முதல் பிஎஃப் வரை பல விதிகளில் மாற்றம் இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2022, 11:32 AM IST
  • சம்பளம் முதல் அலுவலக நேரம் வரை அனைத்தும் மாறும்.
  • புதிய ஊதியக் குறியீட்டில் அதிகபட்ச வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • ஓய்வு பெறும்போது அதிக தொகை கிடைக்கும்.
New Wage Code: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 3 நாட்கள் வார விடுமுறை, விதிகளில் மாற்றம் title=

புதிய ஊதியக் குறியீடு: நீங்களும் வேலைக்கு செல்லும் நபராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆம், விரைவில் நாட்டில் நான்கு தொழிலாளர் குறியீடுகள் (தொழிலாளர் குறியீடு) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு பணியாளர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று வார விடுமுறையைப் பெறத் தொடங்குவார்கள். 90 சதவீத மாநிலங்கள் தொழிலாளர் சட்ட விதிகளை உருவாக்கிவிட்டதாகவும், அவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சம்பளம் முதல் அலுவலக நேரம் வரை அனைத்தும் மாறும்

இது குறித்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தகவல் தெரிவித்துள்ளார். நான்கு தொழிலாளர் குறியீடுகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று யாதவ் நம்பிக்கை தெரிவித்தார். புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, சம்பளம், அலுவலக நேரம் முதல் பிஎஃப் வரை பல விதிகளில் மாற்றம் இருக்கும். தொழிலாளர் துறையில் பணிபுரியும் முறைகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தின் தேவைக்கு இடமளிக்கும் வகையில் புதிய சட்டம் உள்ளது என்றார் அவர்.

அமைப்புசாரா துறையில் சுமார் 38 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்

தொழிலாளர் சட்டத்தின் நான்கு குறியீடுகளுக்கான வரைவு விதிகள் மத்திய அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்க அரசு செயல்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் கூறினார். அதனால்தான் இ-ஷ்ரம் போர்டல், அதாவது அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளம் உருவாக்கப்படுகிறது. அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, நாட்டில் அமைப்புசாரா துறையில் சுமார் 38 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வருவதால் எவற்றிலெல்லாம் மாற்றம் இருக்கும் என இந்த பதிவில் காணலாம். 

வேலை நேரம்

புதிய ஊதியக் குறியீட்டில் அதிகபட்ச வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது 4-3 என்ற விகிதத்தில் வாரத்தின் படி பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 நாட்கள் அலுவலகம், 3 நாட்கள் வார விடுமுறை. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் பிறகு பணியாளருக்கு 30 நிமிட இடைவெளி கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Tax Saving Tips: பெற்றோர் / கணவன் / மனைவி வீட்டில் தங்கி HRA வரி விலக்கு கோர முடியுமா? 

30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வேலை செய்தால் ஓவர்டைம்

புதிய ஊதியக் குறியீட்டில், 15-30 நிமிடங்கள் அதிகமாக வேலை செய்தால், அதை 30 நிமிடங்களாக கணக்கிட்டு ஓவர்டைமில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​30 நிமிடங்களுக்கு குறைவான நேரம் கூடுதல் நேரமாக கருதப்படுவதில்லை.

ஊதிய அமைப்பு மாறும்

புதிய ஊதியக் குறியீடு சட்டத்தின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் நிறுவனத்தின் (காஸ்ட் டு கம்பனி-சிடிசி) செலவில் 50 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது. ஊதியச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் ஊதியம் (டேக் ஹோம் சேலரி) குறையும்.

ஓய்வு பெறும்போது அதிக தொகை கிடைக்கும்

புதிய ஊதியக் குறியீட்டின் படி, பிஎஃப் அதிகரிப்புடன், கிராஜுவிட்டிக்கான பங்களிப்பும் அதிகரிக்கும். அதாவது, கையில் கிடைக்கும் ஊதியம் குறைக்கப்பட்டு, அதன் பலன் பிஎஃப் மற்றும் ஓய்வூதியத்தில் கிடைக்கும். சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பான விதிகள் மாறும்.

மேலும் படிக்க | Fixed Deposit-ல் டெபாசிட் செய்யணுமா? இந்த வங்கியில் கிடைக்கும் அசத்தும் விகிதங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News