Price Hike: ஜூன் 1 முதல் நாடு முழுவதும் புதிய கார்களின் விலை அதிகரிக்கிறது

ஜூன் முதல் தேதியில் இருந்து புதிய கார்களின் விலை அதிகமாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2022, 07:25 AM IST
  • ஒரு வாரத்தில் அதிகரிக்கிறது கார் விலை
  • சில குறிப்பிட்ட கார்களின் விலை அதிகரிக்கும்
  • போக்குவரத்து அமைச்சக அறிவிப்பின் எதிரொலி
Price Hike: ஜூன் 1 முதல் நாடு முழுவதும் புதிய கார்களின் விலை அதிகரிக்கிறது title=

புதுடெல்லி: கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கான முக்கியமான செய்தி இது. ஜூன் முதல் தேதியில் இருந்து புதிய கார்களின் விலை அதிகமாகிறது.  இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தின் விலை ஆகும். 

தற்போது இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுவாக இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் ஐஆர்டிஏஐ, பிரீமியம் தொடர்பான செய்திகளை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
புதிய அறிவிப்பின்படி, 150சிசிக்கு மேல் உள்ள பைக்குகளுக்கு 15 சதவீதம் பிரீமியம் உயர்வு இருக்கும். அதேபோல், ஜூன் 1 முதல், 1000சிசி முதல் 1500சிசி வரையிலான தனியார் காருக்கு 6 சதவீதம் பிரீமியம் செலுத்த வேண்டும். 

இவற்றைத் தவிர புதிய தனியார் காருக்கான (Private Car) மூன்றாம் நபர் பிரீமியமாக 23 சதவீதம் கூடுதல் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இது 1000சிசி வரையிலான வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஆடி கார் என ஆடம்பர கார் பிரியர் ஜஸ்டின் பீபரின் கார்கள்

புதிய தனியார் காருக்கான மூன்றாம் தரப்பு பிரீமியம் (Third party insurance premium)

புதிதாக ஒரு நபர், தனியார் காரை வாங்கினால், இந்த காரின் மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் 11 சதவீதம் அதிகமாக இருக்கும். இந்த பிரீமியம் 1000சிசி முதல் 1500சிசி வரையிலான வாகனங்களுக்கு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். 

அதேபோல், புதிய இரு சக்கர வாகனங்களுக்கு, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியமத்தின் காப்பீட்டுக் கட்டணம், தற்போது இருக்கும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, 17 சதவீதம் அதிகரிக்கிறது.
அதாவது, ஒட்டுமொத்தமாக உங்கள் வாகனத்தின் இறுதி விலை அதிகரிக்கும்.

அதேபோல, வர்த்தக சரக்கு வாகனங்களின் மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்திலும் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மோட்டார் மூன்றாம் நபர் காப்பீடு அதிகரிக்கப் போகிறது. 
ஜூன் 1ம் தேதிக்கு முன் கார் வாங்கினால், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News