நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள் அல்லது முதலீடு செய்ய உள்ளீர்கள் என்றால், சரியான மியூச்சுவல் ஃபண்டுகளில் முறையாக முதலீடு செய்வதும், உங்களுக்கு தேவையான நேரத்தில் அதிலிருந்து வெளியேறுவது பற்றி தெரிந்து கொள்ளவதும் மிக முக்கியமாகும். உங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை ரெடீம் செய்ய சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான முடிவாகும்.
மியூச்சுவல் ஃபண்ட் ரெடெம்ப்ஷன் என்பது ஃபண்ட் யூனிட்களை விற்பதாகும். உங்கள் யூனிட்களை ரெடீம் செய்து, நீங்கள் உங்கள் முதலீட்டில் இருந்து நெட் அசெட் வேல்யூவில் (NAT) பணத்தை எடுக்கலாம். நீங்கள் ஃபண்டை ரெடீம் செய்யும்போது, நிதி உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே மியூசுவல் ஃபண்ட் ரெடெம்ஷன் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகளை ஒருவர் ரிடீம் செய்ய பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப உங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை ரிடீம் செய்யலாம். .
இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் மியூசுவல் ஃபண்டை ரிடீம் செய்ய நீங்கள் முடிவு செய்யலாம்:
- உங்கள் நிதி இலக்கு நிறைவேற்றப்பட்ட நிலையில் மியூசுவல் ஃபண்டை மக்கள் ரிடீம் செய்கிறார்கள். மக்கள் தங்கள் மியூசுவல் ஃபண்டிலிருந்து பணத்தை எடுக்க இது மிகவும் பொதுவான காரணமாக உள்ளது.
- முதலீடு செய்ய காரணமாக இருந்த இலக்கு நிறைவேறாத பட்சத்தில் மியூசுவல் ஃபண்டை சிலர் ரிடீம் செய்வார்கள். எந்த நோக்கத்திற்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தீர்களோ, அது நிறைவேறவில்லை என்றாக் ரிடீம் செய்யப்படும்.
- ஃபண்ட் அண்டர் பர்ஃபார்ம் செய்தால், அதாவது செயல்திறன் குறைவாக இருந்தால், ரிடீம் செய்யப்படும்.
- மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட காலம் வைத்திருக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டாலும், உங்கள் ஃபண்ட் நீண்ட காலமாக செயல்படவில்லை என்றால், உங்களுக்கு அதில் அதிக நம்பிக்கை ஏற்படவில்லை என்றால், அதை விற்று விடுவதே நல்லதாகும்.
மியூசுவல் ஃபண்டுகளை எவ்வாறு ரிடீம் செய்வது?
உங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை பல வழிகளில் ரிடீம் செய்யலாம்
டிரேடிங் அல்லது டிமேட் கணக்கு
நீங்கள் டிமேட் அல்லது டிரேடிங் கணக்கு மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கியிருந்தால், உங்கள் யூனிட்களையும் இங்குதான் விற்க வேண்டும். இதற்கு நீங்கள் அதே கணக்கையும் பயன்படுத்த வேண்டும். இந்த முழு செயல்முறையும் ஆன்லைனில் இருக்கும். செயல்முறை முடிந்ததும், அந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் பெறுவீர்கள்.
AMCகள் மற்றும் RTA களில் இருந்து நேரடியாக செய்யலாம்
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பெரும்பாலும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ஏஎம்சிகள் (மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்) மற்றும் ஆர்டிஏக்கள் (பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்கள்) மூலம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர் AMC அலுவலகத்திற்குச் சென்று ஆஃப்லைனில் ரெடீம் செய்யலாம். அல்லது அதன் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் செய்யலாம். முதலீட்டாளர் தனது IFSC குறியீட்டைக் கொடுக்கவில்லை என்றால், AMC அவருக்குக் கூரியர் மூலம் அகவுண்ட் பேயி காசோலையையும் அனுப்பலாம்.
முகவர் அல்லது விநியோகஸ்தர் மூலம்
உங்கள் நிதி விநியோகஸ்தர் மூலமாகவும் உங்கள் மியூசுவல் ஃபண்டை ரிடீம் செய்யலாம். இதற்கு, ரிடெம்ப்ஷன் படிவத்தில் கையொப்பமிட்டு விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை எடுத்து AMC அலுவலகம் அல்லது RTA அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, டிஏ 41% ஆக உயரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ