Hair Growth Oil For Long Hair: பல பெண்கள் நீண்ட கூந்தலை விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு முடி வளரவது என்பது மிகப்பெரிய சவாலாகும். சில நேரங்களில் முடி உதிர்தல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை முடி வளர்ச்சியை பாதிக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நீண்ட கூந்தலைப் பெற விரும்பினால், அதுவும் கூந்தல் இடுப்பு அல்லது முழங்கால் வரை வளர விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள முறையில் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைத் தடவலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெயில் நல்ல அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இவை கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, சேதமடைந்த கூந்தலை தடுக்க உதவுகிறது, முடி அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆனால், இந்த தேங்காய் எண்ணெயை அப்படியே தடவுவதற்குப் பதிலாக, அதில் இரண்டு பொருட்களைக் கலந்து, தடவினால் முடி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெய் முடியில் நல்ல விளைவை ஏற்படுத்துவதோடு கூந்தலை நீளமாக்க உதவும்.
நீண்ட கூந்தலுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் எண்ணெய் | Homemade Oil For Long Hair:
இந்த எண்ணெய் தயாரிக்க தேங்காய் எண்ணெய், செம்பருத்தி பூ, வெந்தய விதைகள் தேவைப்படும். செம்பருத்திப் பூக்களில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் இரும்புச்சத்து நல்ல அளவில் நிறைந்துள்ளது. அத்துடன் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதோடு, மயிர்க்கால்களும் இந்த பூவிலிருந்து பலன் பெறக்கூடும். அதே நேரத்தில், வெந்தய விதைகளில் நல்ல அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் தயாரிக்க, முதலில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி கொள்ளவும், அதில் இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகள் மற்றும் 4 முதல் 5 செம்பருத்தி பூக்கள் சேர்த்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை நன்கு சூடானதும், ஆறவைக்கவும். எண்ணெய் ஆறிய பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பிப் கொள்ளவும். தயாரானது முடி வளர்ச்சி எண்ணெய். இந்த எண்ணெயை கூந்தலில் தடவி மசாஜ் செய்து குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் மமறுநாள் கூந்தலை கழுவவும். இந்த எண்ணெய் முடி வளர்ச்சியில் விளைவைக் காணலாம்.
நீளமான கூந்தலுக்கு, தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய் தயாரிக்கலாம். அரை கிண்ணம் தேங்காய் எண்ணெயை எடுத்து அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து இலைகள் வெடித்ததும் கேஸை அணைக்கவும். இந்த எண்ணெயை கூந்தலில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைமுடியில் தடவி வந்தால், முடி வளர்ச்சி அடையத் தொடங்கும். மேலும் கூந்தலும் பளபளப்பாகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முடி உதிர்ந்து, வழுக்கைக்கு குட் பை சொல்லுங்க.. உடனே இதை செய்யுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ