மார்கழி மாதம் ஆறாம் நாள்! திருப்பாவை திருவெம்பாவை!!

மார்கழி மாதத்தின் ஆறாம் நாளான இன்று இறைவனை துதித்து பாடி மனத்துயில் போக்குவோம்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2021, 06:56 AM IST
மார்கழி மாதம் ஆறாம் நாள்! திருப்பாவை திருவெம்பாவை!! title=

சைவமும் வைணவமும் ஒன்றாக போற்றும் மாதம் மார்கழி மாதம். இந்த புனிதமான மாதத்தில் அதிகாலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறையருளைப் பெறுவோம்., திருப்பள்ளி எழுச்சி பாடி இறைவனை துதிப்போம்..

திருப்பாவை பாசுரம் 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: ஆருயிர்த் தோழியே! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் மதுரமான ஒலி கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெண்ணிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? நீ உடனே எழுந்திரு! தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சகடாசுரனை வதம் செய்தவனுமான கண்ணனை யோகிகளும், முனிவர்களும் அழைக்கும் குரல் கேட்கவில்லையா? ஹரி ஹரி என்ற நாமத்தைக் கேட்டு உள்ளம் குளிர உடனே எழுந்திருக!! 

ALSO READ | மார்கழி மாதம் ஐந்தாம் நாள் திருப்பாவை திருவெம்பாவை!!

திருவெம்பாவை பாடல் 6 (Thiruvempavai song)

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நானே வந்து அதிகாலையில் உங்களை எழுப்புவேன் என்று நேற்று நீ எங்களிடம், சொன்னாயே? இன்றும் நாங்கள் வந்து உன்னை எழுப்புகிறோம்? உனக்கு வெட்கமாக இல்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களாலும் கூட அறிய முடியாத தன்மையைக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களைப் பார்! சிவபெருமானை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்துமா? உனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் இறைவனை வணங்க வேண்டும் உடனே வா!!

Also Read | மார்கழி 4 ஆம் நாள்: ஆழி மழைக்கண்ணனை போற்றுவோம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News