மலேசியாவில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மலேசியாவில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்த விழா தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடம் தைப்பூசம் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிலும் இன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கோலாலம்பூரின் புறப்பகுதியில் உள்ள பத்துகுகை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடம்பில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பால்குடம் ஏந்தி, தேங்காய் உடைத்து, பால் காவடி, பன்னீர் காவடி புஷ்ப காவடிகளை, மொட்டை அடித்தும் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிப்பட்டனர்.