FASTag சேவையில் இத்தனை விதிகளா... தெரியாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும்!

FASTag Recharge: FASTag விதிகள் புறக்கணிக்கப்பட்டால், பல்வேறு சிக்கலைச் சந்திக்க நேரிடும். எனவே, சில விதிகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 6, 2023, 05:26 PM IST
  • FASTag சேவை அரசால் தொடங்கப்பட்டது.
  • நெடுஞ்சாலைக்கு செல்லாவிட்டாலும், FASTag வைத்திருப்பது இன்றியமையாதது.
FASTag சேவையில் இத்தனை விதிகளா... தெரியாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும்! title=

FASTag Recharge: பெரும்பாலான மக்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அதே சமயம், சுங்கச்சாவடி கட்டணத்தை எளிதாக செலுத்தும் வகையில், அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதே நேரத்தில், சுங்கக் கட்டணம் வசூலிப்பதால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. மக்களின் பிரச்னைகளை நீக்கும் வகையில், FASTag சேவை அரசால் தொடங்கப்பட்டது. இதன் மூலம், மக்கள் நீண்டநேரம் நிற்காமல், ரொக்கப்பணத்தை கொடுக்காமல் சுங்கச்சாவடியைக் கடக்க முடியும். இருப்பினும், FASTag குறித்து மக்கள் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் பணம் செலவிடப்படுகிறது:`

சில காலத்திற்கு முன்பு அரசாங்கம் FASTag சேவையை அறிமுகப்படுத்தியது, அவை வாகனத்தின் முன் கண்ணாடிகளில் பொருத்தப்பட்ட ப்ரீபெய்ட் டேக்ஸ் ஆகும், அவை டோல்களில் பிரத்யேக பாதைகள் வழியாக நிற்காமல் செல்ல அனுமதிக்கின்றன. ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை (Radio Frequency Identification Technology) பயன்படுத்தி வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.

மேலும் படிக்க | ஓட்டுநர்களுக்கு நற்செய்தி... இனி சுங்கச்சாவடிகளில் நிற்கவே வேண்டாம் - 6 மாதத்தில் வரும் புது திட்டம்

விதிகளைப் பின்பற்றுவது முக்கியம்:

FASTag இன் விதிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். FASTag விதிகள் புறக்கணிக்கப்பட்டால், சிக்கலைச் சந்திக்க நேரிடும். சில விதிகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

- FASTag இன் புதிய விதிகளில் முதன்மையானது, இந்த டேக்ஸ் அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

- FASTag இல்லாமல் FASTag பாதையில் நுழைந்தால், நீங்கள் டோல் தொகையை இரட்டிப்பாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

- RFID-இல் ஏதேனும் சேதம் அல்லது போதிய இருப்பு இல்லாத காரணத்தால் உங்கள் FASTag சேவை செய்ய முடியாவிட்டால், நீங்கள் இருமடங்கு டோல் தொகையைச் செலுத்த வேண்டும்.

- 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், உங்கள் வாகனத்திற்கான மூன்றாம் நபர் காப்பீட்டை பெறுவதற்கு அரசாங்கம் FASTag சேவையை கட்டாயமாக்கியுள்ளது. எனவே நீங்கள் உங்கள் காரை நெடுஞ்சாலையில் எடுத்துச் செல்லாவிட்டாலும் FASTag சேவையை பெறுவது இன்றியமையாதது.

- 2017 க்குப் பிறகு விற்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் முன் பொருத்தப்பட்ட FASTagகளுடன் வருகின்றன. எனவே, நீங்கள் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட பழைய வாகனத்தின் உரிமையாளராக இருந்தால், நீங்கள் FASTag சேவையை பெற வேண்டும்.

மேலும் படிக்க | Toll Tax Rules: டோல் வரி விதிகளில் முக்கிய மாற்றம்! நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News