45 வயசுலேயேயும் டீன்ஏஜ் பொண்ணுங்க மாதிரி இருக்க சூப்பரான டிப்ஸ் - இதை மட்டும் மாத்துங்க போதும்

Women lifestyle News : 45 வயதிலும் டீனஏஜ் பொண்ணுங்க மாதிரி இருக்க வேண்டும் என்றால், உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக இந்த நான்கு பழங்களை சாப்பிட வேண்டும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2024, 04:27 PM IST
  • 45 வயதிலும் அழகாக ஜொலிக்க வேண்டுமா?
  • தினசரி வாழ்க்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
  • வயதானாலும் நீங்கள் இளமையாக இருப்பீர்கள்
45 வயசுலேயேயும் டீன்ஏஜ் பொண்ணுங்க மாதிரி இருக்க சூப்பரான டிப்ஸ் - இதை மட்டும் மாத்துங்க போதும் title=

Women lifestyle News Tamil : 45 வயதிலும் நீங்கள் ஆரோக்கியமகவும், பிரகாசமான அழகு தோற்றம், பளபளப்பான தோல் ஆகியவற்றோடும் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?. அதற்கு நான்கே நான்கு விஷயங்களை உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். பலமணிநேரம் உடற்பயிற்சி செய்வதோடு, கெட்டோ டயட் மற்றும் பல்வேறு வகையான டயட்கள் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள், சருமத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க விரும்புகின்றனர். இது வெறுமனே கிடைத்துவிடாது. நீங்கள் வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றில் சிரத்தை எடுத்துக் கொண்டால், எதிர்பார்க்கும் மாற்றம் கிடைக்கும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

மேலும் படிக்க | பற்களில் மஞ்சள் கறை போக... இந்த 3 பழங்களும் நல்லா வேலை செய்யும் - என்னென்னு பாருங்க!

45 வயதிலும் டீன்ஏஜ் பெண்கள் போன்று இருக்க விரும்புபவர்களுக்கான டிப்ஸ்

பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது

பெண்கள் உடல் நலனில் அக்கறை இருந்தால் பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதவே கூடாது, அதில் பழைய உணவுகளை சாப்பிட்டால் இன்னும் உடல்நிலை மோசமாகுமே தவிர சிறப்பாகவா இருக்கும்?. காலையில் உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும் உணவுகளைசாப்பிடுங்கள். பழங்கள் மற்றும் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்

உடலின் உயரத்துக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், பொதுவாக எடை இழப்பு மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க பெண்கள் ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது என்பது உங்களுக்குள் ஏற்படும் நீரிழப்பை தடுத்து புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். தோல் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.  

இரவு கடினமான உணவு வேண்டாம்

காலை உணவை ராஜாக்களைப் போலவும், மதிய உணவை நடுத்தர வர்க்கத்தைப் போலவும், மாலை அல்லது இரவு உணவை ஏழைகளைப் போலவும் சாப்பிட வேண்டும், ஏனென்றால் இது லேசான உணவாக இருக்க வேண்டும். மாலையில் லேசான உணவைச் சாப்பிட்டால், அது ஜீரணிக்க குறைந்த நேரம் எடுக்கும். அதன்மூலம் உங்கள் உடல் சரியான ஓய்வு எடுக்க போதுமான நேரம் கிடைக்கும். இது உடல் ஆரோக்கியத்தில் இன்றியமையாத விதியாகும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

பெரும்பாலும் பெண்களுக்கு வொர்க்அவுட் செய்ய நேரமில்லாத பிரச்சனை இருக்கும். ஆனால் இவர்களின் இந்த பழக்கம் எதிர்காலத்தில் பல நோய்களை உண்டாக்கும். அதனால், பெண்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், 24 மணி நேரத்தில் உங்களுக்காக அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள். நீங்கள் லேசான உடற்பயிற்சி செய்யலாம், நடைபயிற்சி செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முடியும்.

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதா? இளம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News