போலி மாத்திரை மருந்துகளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

fake medicines in India: போலி மாத்திரை மருந்துகள் நாடு முழுவதும் பல இடங்களில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன என்பதால் நீங்கள் உண்ணும் மருந்து மாத்திரை உண்மையானதா என்பதை கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 30, 2024, 07:40 AM IST
  • இந்தியாவில் போலி மருந்து மாத்திரைகள் அதிகம்
  • போலி மாத்திரைகளை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம்
  • அதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
போலி மாத்திரை மருந்துகளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் title=

இந்தியாவில் போலி மருந்து வணிகம் பெரிய நெட்வொர்காக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதனால், இந்த போலி மருந்துகள் தயாரிப்பை நிறுத்துவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) நடத்திய விசாரணையில் பல இடங்களில் போலி மருந்துகளைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் சோதனையில், சந்தையில் இருந்து வெவ்வேறு மருந்துகளின் 1167 மாதிரிகள் சரிபார்க்கப்பட்டன. இதில் 58 மருந்துகள் பரிசோதனையில் தோல்வியடைந்தன. 

அதே நேரத்தில், இரண்டு மருந்துகள் முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டது. இந்த மருந்துகள் உத்தரகாண்ட், குஜராத், உ.பி., ஹரியானா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மேகாலயா, சிக்கிம், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. ஜனவரியில் கூட, நாட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 5 சதவீத மருந்துகள் பரிசோதனையில் போலி என்பது உறுதி செய்யப்பட்டன.

பிரச்சனை என்னவென்றால், இந்த மருந்துகளில் பெரும்பாலானவை அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகள். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆன்டிபயாடிக் மருந்து தர சோதனையிலும் தோல்வியடைந்துள்ளது. இது தவிர காய்ச்சலுக்கான பாராசிட்டமால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்து, ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்களுக்கான மருந்து, கல்லீரல் முன்னேற்றத்திற்கான மருந்து, தோல் நோய்த் தொற்றுக்கான மருந்து உள்ளிட்டவையாக உள்ளன. இத்தகைய தரம் குறைந்த மருந்துகளை உபயோகிப்பதால், அதனை பயன்படுத்தும் நோயாளிக்கு எந்தப் பலனையும் அளிப்பதில்லை. 

மேலும் படிக்க | செலவே இல்லாமல் ஏசியை சுத்தம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மருந்துகளில் கரைதல் பிரச்சனை

நொய்டாவில் உள்ள யதர்த் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பிரகார் கர்க் கூறுகையில், பெரும்பாலான போலி மருந்துகளில் கரைவதில் சிக்கல் உள்ளது. அதாவது சரியாக கரையாது. இது தவிர, அந்த மருந்தில் எழுதப்பட்ட தகவல்கள் சரியாக இருப்பதில்லை. அந்த மருந்திலும் இருக்க வேண்டிய பொருட்களின் அளவு சரியாக இருக்காது. பட்டியலின்படி, அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரபலமான ஆண்டிபயாடிக் மருந்தான ஆஃப்லோக்சசின், சரியாகக் கரைவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது என கூறினார்.

தோல் நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு கிரீம் போலியானது என கண்டறியப்பட்டதாகவும் டாக்டர் பிரகார்  தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பிரபல பிராண்ட் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. Zole-F: இந்த மருந்து தோல் நோய்த்தொற்றுகளுக்கான சிகிச்சைக்காக தயாரிக்கப்படுகிறது. இது ஹிமாச்சலின் சோலனில் அமைந்துள்ள சன் பார்மா என்ற பெரிய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தில் செறிவு மற்றும் தூய்மையின் சிக்கல் கண்டறியப்பட்டது.

மருந்தின் தரத்தில் சமரசம்

நொய்டாவைச் சேர்ந்த வேதியியலாளர் சங்கம் ரவி விஜ் கூறுகையில், போலி மருந்துகள் அல்லது தரமற்ற மருந்துகள் பொதுவாக மருந்து தயாரிக்கும் நிறுவனம் தரத்தில் சமரசம் செய்து அல்லது சட்டவிரோதமான தொழிற்சாலையில் முற்றிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இப்படி இருக்கையில் மருந்தின் உண்மை தன்மையை சாதாரண மனிதர்கள் எப்படி கண்டறிய முடியும். இருப்பினும் அதற்கு ஒரு வழி இருக்கிறது.

போலி மருந்துகளை கண்டுபிடிக்க வழி

பல மருந்துகளில் QR குறியீடுகள் வைக்கப்பட்டுள்ள. அதன் உதவியுடன் மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம் என்றாலும் ஒவ்வொரு மருந்திலும் QR குறியீடு இன்னும் கிடைக்கவில்லை. இதுதான் கவலைக்குரிய விஷயம். வெளிப்படையாக சொல்வதென்றால் போலி மருந்துகளை அவ்வளவு எளிதாக சாமானியர்களால் கண்டுபிடிக்க முடியாது. அரசு இது குறித்து கடுமையான நடவடிக்கை மற்றும் சோதனைகளை மேற்கொண்டாலும் முழுமையாக போலி மருந்து புழக்கத்தை கட்டுபடுத்த முடியவில்லை. மத்திய அரசு தரவுகளின்படி, இந்தியாவில் விற்கப்படும் மொத்த மருந்துகளில் 0.3 சதவீதம் மட்டுமே போலியானவை என்று அரசு கூறுகிறது. ஆனால் இதன் உண்மையான சந்தை புழக்கம் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | கொழு கொழு தொப்பை குறைய வேண்டுமா? இந்த ஜூஸை குடித்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News