மிக நீநீநீநீண்ட தூர ரயில் வழித்தடங்கள்! போய் சேர பல நாட்கள் ஆகும்!

ரயில்களின் வேகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று உலகில் பல ரயில்கள் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் ஓடுகின்றன. இந்தியாவின் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதனால், மிகவும் தொலை தூரத்திற்கான ரயில்களும் அதிகரித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 18, 2023, 05:38 PM IST
  • உலகில் பல ரயில்கள் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் ஓடுகின்றன.
  • இந்தியாவின் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
  • புல்லட் ரயில்கள் கூட திணறுமோ என்று நினைக்கும் அளவிற்கு மிக நீண்ட ரயில் பாதைகள் பல உலகில் உள்ளன.
மிக நீநீநீநீண்ட தூர ரயில் வழித்தடங்கள்! போய் சேர பல நாட்கள் ஆகும்! title=

ரயில்களின் வேகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று உலகில் பல ரயில்கள் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் ஓடுகின்றன. இந்தியாவின் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஆனால் புல்லட் ரயில் கூட ஓடும் போது திணறுமோ என்ற அளவிற்கு மிக நீண்ட வழித்தடங்கள் பாதைகள் உலகிலும் இந்தியாவிலும் ஏராளம் உள்ளன. காற்றின் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில்கள் கூட இந்தப் பயணத்தை முடிக்க பல நாட்கள் ஆகும். உலகின் மிக நீளமான ஐந்து ரயில் வழித்தடங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதில் இந்திய ரயில்வேயின் ஒரு வழித்தடமும் இதில் அடங்கும்.

இன்றைக்கு புல்லட் போன்ற அதிவேக ரயில்கள் தூரத்தைக் கடந்துவிட்டன. இந்த ரயில்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு கண் இமைக்கும் நேரத்தில் வந்து சேரும். ஆனால் இன்றும், ஒரு  புல்லட் ரயில்கள் கூட திணறுமோ என்று நினைக்கும் அளவிற்கு மிக நீண்ட ரயில் பாதைகள் பல உலகில் உள்ளன. உலகின் மிக நீளமான ரயில் பாதைகள் பற்றி அறிந்து கொள்ளலாம். 

புல்லட் ரயில்கள் கூட பல நாட்கள் எடுக்கும் உலகின் மிக நீண்ட ரயில் பயணம்

டிரான்ஸ்-சைபீரியன் இரயில்வே

உலகின் மிகப்பெரிய ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இது நாட்டின் தலைநகர் மாஸ்கோவை கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக் உடன் இணைக்கிறது. 9,259 கிமீ நீளமுள்ள இந்தப் பாதையில் பயணத்தை முடிக்க ஏழு நாட்கள் ஆகும். இந்தியாவின் வந்தே பாரத் முழு வேகத்தில் 160 கிமீ வேகத்தில் ஓடினால், இந்தப் பாதையில் பயணிக்க சுமார் 58 மணி நேரம் ஆகும். அதேபோல, 400 கிமீ வேகத்தில் ஓடும் புல்லட் ரயிலும் இந்தப் பயணத்தை முடிக்க ஒரு நாள் ஆகும்.

டொராண்டோ முதல் வான்கூவர் வரை

உலகின் இரண்டாவது நீளமான இரயில் பாதை கனடாவில் உள்ளது. இது வான்கூவரில் இருந்து டொராண்டோவை இணைக்கிறது. இந்த பாதையின் நீளம் 4,466 கி.மீ. அதிகாரப்பூர்வமாக, பயணம் முடிக்க நான்கு நாட்கள் ஆகும். இந்த ரயிலில் இருந்து  பார்க்கும் போது இயற்கையின் கண்கவர் காட்சிகளை காணலாம். இந்த வழித்தடத்தில் ஓடும் ரயிலுக்கான குறைந்தபட்ச கட்டணம் $529. ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு கனடா. புல்லட் ரயில் இந்த வழித்தடத்தில் 11 மணி நேரத்திற்கும் மேலாக எடுக்கும், ஆனால் வந்தே பாரத் இந்த பயணத்தை ஒரு நாளில் முழு வேகத்தில் கடக்க முடியும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..!

ஷாங்காய் முதல் லாசா வரை

உலகின் மூன்றாவது பெரிய ரயில் பாதை சீனாவில் உள்ளது. இது ஷாங்காய் மற்றும் திபெத்தின் லாசாவை இணைக்கிறது. இதன் நீளம் 4,373 கி.மீ. ரயில் பயணத்தை முடிக்க 46 மணி 44 நிமிடங்கள் அதாவது சுமார் இரண்டு நாட்கள் ஆகும். இது ஷாங்காய் ரயில் நிலையத்திலிருந்து தினமும் இரவு 08.02 மணிக்குப் புறப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு மாலை 06.46 மணிக்கு லாசாவை அடைகிறது. இந்த பாதையிலும் புல்லட் அரை நாள் எடுக்கும்.

சிட்னி முதல் பெர்த் வரை

தொலை தூர ரயிகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரயில் பாதை நான்காவது இடத்தில் உள்ளது. சிட்னியில் இருந்து பெர்த்தை இணைக்கும் இந்த பாதை 4,352 கிமீ நீளம் கொண்டது. நான்கு நாட்களில் பயணத்தை நிறைவு செய்யும் இந்த வழித்தடத்தில் இந்திய பசிபிக் ரயில் இயக்கப்படுகிறது. இது இந்தியப் பெருங்கடலின் கடற்கரையிலிருந்து ஓடி பசிபிக் பெருங்கடலின் கடற்கரையை அடைகிறது. இந்தப் பயணத்தின் போது இயற்கையின் பல அற்புதங்களைக் காணலாம். இந்தப் பயணத்தில், இது உலகின் மிக நீளமான நேரான நீளத்தை கடந்து செல்கிறது. இந்த 478 கிமீ நீளம் தெற்கு ஆஸ்திரேலியாவில் தி நுல்லார்போர் எனப்படும். வந்தே பாரத் பயணத்தை முழு வேகத்தில் முடிக்க ஒரு நாள் எடுக்கும்.

திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை

இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை அசாமில் உள்ள திப்ருகரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு இணைக்கிறது. இது உலகின் ஐந்தாவது நீளமான ரயில் பாதையாகும். இதன் நீளம் 4,237 கி.மீ. இந்த வழித்தடத்தில் இயங்கும் விவேக் எக்ஸ்பிரஸ் பயணத்தை முடிக்க 72 மணி நேரம் ஆகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டால், இந்த தூரத்தை கடக்க 26 மணி நேரத்திற்கு மேல் ஆகும். 400 வேகத்தில் ஓடும் புல்லட் ரயில் இந்த தூரத்தை கடக்க 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

மேலும் படிக்க | Indian Railways மாஸ் அப்டேட்: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. மிகப்பெரிய நிவாரணம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News