Gold Sweet: தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட் இனிக்குமா? டேஸ்ட் பார்க்க ரெடியா?

தங்கத்தால் செய்யப்பட்ட இந்த இனிப்பைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதன் விலையோ பணக்காரர்கள் கூட வாங்குவதற்கு யோசிக்கச் செய்யும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2022, 01:42 PM IST
  • தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பு
  • உலகின் மிக விலையுயர்ந்த இனிப்புகள்
  • தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்புகள்
Gold Sweet: தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட் இனிக்குமா? டேஸ்ட் பார்க்க ரெடியா? title=

எவ்வளவு பணம் இருந்தாலும், பணத்தை சாப்பிட முடியுமா என்ற கேள்வியை அடிக்கடி கேட்டிருக்கலாம். அதேபோல, தங்கத் தட்டில் சாப்பிட்டாலும், தங்கத்தை சாப்பிட முடியாது என்ற வார்த்தைகளையும் கேட்டிருக்கலாம்.

ஆனால், கால மாற்றத்தில் எல்லாமே சாத்தியமோ என்று தோன்றுகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பு திண்பண்டம் கிலோ 16 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது என்ற செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.

தங்கத்தால் செய்யப்பட்ட இந்த இனிப்பின் விலை, பணக்காரர்கள் கூட வாங்குவதற்கு யோசிக்கச் செய்யும். நாம் அனைவரும் இனிப்புகளை விரும்புகிறோம். இனிப்புகளை விரும்பி உண்பவர்கள் பல்வேறு வகையான இனிப்புகளை விரும்புவார்கள். 

சிலருக்கோ, விலை அதிகமான இனிப்புகளை (Eating Culture) சாப்பிடும் முன் ஒரு முறை கூட யோசிக்க மாட்டார்கள். அந்த இனிப்பிற்காக அவர்கள் வழக்கத்தை விட அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தாலும் கவலைப்படமாட்டார்கள்.

'கோல்ட் பிளேட்டட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இனிப்பை தயாரிக்கும் செய்முறை வீடியோ, சமூக ஊடகங்களில் (Viral Video) வெளியாகி வைரலாகிறது.

இந்த ஸ்பெஷல் ஸ்வீட்டை செய்த பிறகு, அதில் தங்கக் காகிதத்தை மேலே வைப்பதைப் பார்க்கலாம். பிறகு அதன்மேல் குங்குமப்பூவை வைக்கிறார். இது அதன் அழகை அதிகரிக்கிறது.

விலை கிலோ ரூ.16 ஆயிரம்
இந்த இனிப்பை குங்குமப்பூவால் அலங்கரித்த பிறகு, சிறிய துண்டுகளாக வெட்டப்படுகிறது. ஒரு கிலோ 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த இனிப்பு குறித்து சமூக வலைதளத்தில் ஆச்சரியமான பதிவுகள் பகிரப்படுகின்றன.

ALSO READ | விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இதோ சிம்பிள் வழி

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் oye.foodieee என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் இனிப்புகளின் விலை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், 'எந்த விலையாக இருந்தாலும், இனிப்பு பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது என்று சொல்கிறார். 

தங்கத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்காதா? உலோகத்தை உடல் ஜீரணிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் இது கலப்படமில்லாத சுத்தத் தங்கம் என்று யாரும், ஒரு பேச்சுக்கு கூட சொல்லிவிட முடியாது...

இது போன்ற வைரல் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Also Read | நீர்வீழ்ச்சி விபத்து வீடியோ! சமூக ஊடகங்களில் வைரல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News