இன்னும் மூணு நாள் தான் இருக்கு... ஆதார் கார்டு அப்டேட் பண்ணிட்டீங்களா..!

ஆதார் கார்டில் உள்ள தகவல்களில் ஏதேனும் தவறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆதார் கார்டில் உள்ள உங்களது பெயர், வயது பிறந்த தேதி, முகவரி போன்றவை சரியாக இருக்க வேண்டும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 12, 2024, 04:21 PM IST
இன்னும் மூணு நாள் தான் இருக்கு... ஆதார் கார்டு அப்டேட் பண்ணிட்டீங்களா..! title=

ஆதார் கார்டு அல்லது ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல், வங்கி கணக்கு தொடங்குவது முதல், அரசு திட்டங்கள் பெறுவது, பள்ளி கல்லூரி சேர்க்கை என எல்லா விஷயங்களிலும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரம். அதோடு ஆதார் கார்டில் உள்ள தகவல் அனைத்தும் சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். 

ஆதார் கார்டில் உள்ள தகவல்களில் ஏதேனும் தவறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆதார் கார்டில் உள்ள உங்களது பெயர், வயது பிறந்த தேதி, முகவரி போன்றவை சரியாக இருக்க வேண்டும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணும் சரியானதாக இருக்க வேண்டும். ஆதார் அட்டை விவரங்களை இலவசமாகப் ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ள மார்ச் 14 ஆம் தேதி கடைசி நாள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

ஆதார் கார்டில் உள்ள தகவல்களில் மாற்றங்கள்

இடமாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால், ஆதார் கார்டில் உள்ள முகவரியை திருத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அதோடு அதில் உள்ள புகைப்படங்கள் மிகவும் பழைய புகைப்படமாக இருந்தால், அதையும் அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதோடு பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் மூலம் மட்டுமே ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை, இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். ஆதார் மையத்திற்கு சென்று ஆதார் புதுப்பிக்க, பட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச அப்டேட் வசதி

ஆதார் கார்டில் உள்ள தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யும் வசதியை கடந்த சில மாதங்களாக UIDAI வழங்கி வருகிறது. அதற்கு இன்னும் மூன்று நாட்களில் உள்ளன. எனவே உங்கள் ஆதார் கார்டில் உள்ள தகவலை நீங்கள் திருத்த விரும்பினால், அதனை உடனே செய்யவும். ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை மாற்றம் செய்ய இன்று நடவடிக்கை எடுக்கவும்.

மேலும் படிக்க | பிக்சட் டெபாசிட்டில் பணம் போட திட்டமா? இந்த பாதிப்புகள் ஏற்படலாம் ஜாக்கிரதை!

ஆன்லைனில் ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வதற்கான வழிமுறை

1. முதலில் ஆதாரின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

2. அதில், ஆதார் அப்டேட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். லாகின் செய்து "Update Name/Gender/DOB and Address” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Update Aadhaar Online” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. எடுத்துக்காட்டாக, முகவரியைப் புதுப்பிக்க, நீங்கள் அட்ர்ஸ் அப்டேட் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. அடுத்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, அதன் பின் நீங்கள் பெற்ற OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

5 . இதற்குப் பிறகு Documents Update என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

6. அடுத்து ஆதார் தொடர்பான விவரங்களைக் காண்பீர்கள்.

7. அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, முகவரியைப் புதுப்பிக்க தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.

8. இதற்குப் பிறகு, ஆதார் அப்டேட் செயல்முறையை ஏற்கவும்.

9. இதற்குப் பிறகு நீங்கள், 14 இலக்கம் கொண்ட அப்டேட் கோரிக்கை எண் (URN) எண்ணை பெறுவீர்கள்.

10. இதன் எண் மூலம் ஆதார் அப்டேட் செயல்முறையை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையை அறியலாம்.

மேலும் படிக்க | ரயில் தாமதம் ஆயிடுச்சா? அப்போ பயணிகளுக்கு ரீபண்ட் கண்டிப்பா கிடைக்கும்.. எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News