உங்கள் பான்கார்டில் மோசடியா? சிபில் ஸ்கோர் பாதிக்கும்; கண்டுபிடிக்க வழி

உங்கள் பான் கார்டை பயன்படுத்தி வேறு யாரேனும் மோசடியாக கடன் வாங்கியிருந்தால், அது உங்களின் சிபில் ஸ்கோரை பாதிக்கும் என்பதால், நீங்கள் விழிப்போடு இருக்க வேண்டும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 11, 2023, 06:12 PM IST
  • பான் கார்டுகளில் நடைபெறும் மோசடி
  • பான் கார்டில் வேறு யாரேனும் கடன் வாங்கியிருந்தால்
  • ஈஸியாக கண்டுபிடித்து புகார் செய்யலாம்
உங்கள் பான்கார்டில் மோசடியா? சிபில் ஸ்கோர் பாதிக்கும்; கண்டுபிடிக்க வழி title=

உங்கள் PAN கார்டு உங்கள் முக்கியமான நிதி ஆவணமாகும். வருமான வரித்துறையின் அனைத்து பணிகளிலும் உங்கள் பான் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிப் பணிகளில் கூட பான் கார்டு விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு இருக்கும் முக்கியத்துவத்தைபோலவே, பான்கார்டை வைத்து மோசடிகளும் அரங்கேற்றப்படுகின்றன. பான் கார்டை தவறாகப் பயன்படுத்தி வேறு யாரேனும் கடன் வாங்கியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இங்கு ஏமாற்றுபவர்களுக்கும் ஏமாறுபவர்களுக்கும் பஞ்சமில்லை. 

நீங்கள் கடன் வாங்கும்போது நிராகரிக்கப்பட்டாலும், உங்களின் சிபில் ஸ்கோர் வழக்கத்துக்கு மாறாக குறைந்திருந்தாலும் பான் கார்டு தகவல்களை செக் செய்து கொள்வது நல்லது. ஏனென்றால் உங்களின் பான்கார்டை பயன்படுத்தி வேறு யாராவது கடன் வாங்கியிருக்க வாய்ப்புகள் உண்டு. இதனால், உங்களின் சிபில் ஸ்கோர் குறைந்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பான் கார்டில் ஏதேனும் கடன் வாங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். 

இதற்கு, CIBIL, Equifax, Paytm, Bank Bazaar அல்லது CRIF மூலம் உங்கள் CIBIL ஸ்கோரைச் சரிபார்க்கலாம். CIBIL தளத்தில் அதை எப்படிச் சரிபார்ப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்

CIBIL தளத்தில் கிரெடிட் ஸ்கோர் செக் செய்வது எப்படி? 

* www.cibil.com இணையதள முகவரிக்கு செல்லவும் 

* கீழே ஸ்க்ரோல் செய்யும் போது, ​​உங்கள் CIBIL ஸ்கோரைப் பெறுவதற்கான ஆப்சனை காண்பீர்கள்.

* அதைக் கிளிக் செய்த பிறகு, மூன்று சந்தா திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.

* உங்கள் வசதிக்கு ஏற்ப திட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.

* உங்கள் பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்றவை உங்களிடம் கேட்கப்படும். இங்கே உள்நுழைந்து கடவுச்சொல்லை உருவாக்கவும்.

* இதற்குப் பிறகு, ஐடி வகையில் வருமான வரி ஐடியைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் பான் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். இங்கே பான் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், அதன் பதிவைக் காண்பீர்கள்.

* இதற்குப் பிறகு, சரிபார்ப்புக்காக உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும், அவற்றை நிரப்பி பணம் செலுத்தும் செயல்முறையை முடிக்கவும்.

* மின்னஞ்சல் அல்லது OTP உதவியுடன் உங்கள் கணக்கில் உள்நுழையவும்.

* ஒரு படிவம் கொடுக்கப்படும், அதில் விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் CIBIL ஸ்கோரைச் சரிபார்க்கலாம்.

உங்கள் பான் கார்டில் எத்தனை கடன்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம். உங்கள் பான் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால் அல்லது உங்கள் பான் எண்ணுக்கு எதிராக வேறு யாராவது கடன் வாங்கியிருந்தால், https://incometax.intalenetglobal.com/pan/pan.asp தளத்தில் புகார் செய்யலாம்.

மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!

மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?

மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News