LICயில் வேலை வாய்ப்பு - 100 காலி பணியிடங்கள்

LIC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், 100 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 24, 2022, 02:11 PM IST
  • எல்ஐசியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • 100 காலி பணியிடங்கள் இருக்கின்றன
  • ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்
LICயில் வேலை வாய்ப்பு - 100 காலி பணியிடங்கள் title=

LIC of India நிறுவனத்தில் காலியாக உள்ள Marketing Executive பணிக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. 

காலி பணியிட விவரம்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், LIC of India நிறுவனத்தில் காலியாக உள்ள Marketing Executive பணிக்கு என மொத்தமாக 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

மேலும் படிக்க | IBPS கிளார்க் அட்மிட் கார்டு 2022 ibps.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது

Marketing Executive அனுபவ விவரம்:

Marketing Executive பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் Sales, Market Survey, Marketing of Insurance products போன்ற பணிக்கு சார்ந்த பிரிவுகளில் 2 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

மேலும் படிக்க | New CNG Car: சிறந்த மைலேஜ் வழங்கும் மலிவான CNG கார் அறிமுகம்

ஊதிய விவரம்:

இந்த LIC of India நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.25,000வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிக்கு விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2... என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 10ஆம் தேதி கடைசி நாளாகும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News