இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 28, 2022, 02:05 PM IST
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு
  • ஒரு லட்சம் ரூபாய்வரை சம்பளம் வழங்கப்படும்
  • ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை title=

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ( IOCL ) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Law Officer, Law Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

காலிப் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Law Officer, Law Officer பணிகளுக்கென மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ITR Filing Last Date: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ‘Extend Due Date Immediately’, நீட்டுக்குமா அரசு?

Senior Law Officer – 9 பணியிடங்கள்
Law Officer – 9 பணியிடங்கள்

கல்வி தகுதி:

Senior Law Officer, Law Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law, LLB, Graduation என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Senior Law Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Law Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மழை காலத்தில் வீட்டிலும், வெளியிலும் ‘மின்சார ஷாக்கில்’ இருந்து தப்பிக்க சில டிப்ஸ்

ஊதிய விவரம்:

Senior Law Officer பணிக்கு தேர்வு செய்யபடு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Law Officer பணிக்கு தேர்வு செய்யபடு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CLAT 2022 PG examination, Group Discussion, Group Task and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள்  https://drive.google.com/file/d/1tRuJjSBxuOZCmbjJ8O4I_7Kku0xyoUov/viewதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News