இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து 09 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,61,500 பேருக்கு கொரோனா (Coronavirus) உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது. இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 86.62 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.18 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 12.18 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையில் 12-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) எடுத்த முடிவைத் தொடர்ந்து, ஒரு பிரிவு மாணவர்கள் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயினை ஒத்திவைக்கக் கோரி வந்தனர். ஜேஇஇ மெயின் (JEE Mains) தேர்வுகள் ஏப்ரல் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ALSO READ | COVID-19 in India: 2.60 லட்சத்தை தாண்டிய தினசரி பாதிப்பு
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஜே.இ.இ மெயின் தேர்வுகள் (ஏப்ரல் அமர்வு) ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஜேஇஇ (JEE) மெயின் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேதிகள் தேர்வுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR