Post office Time Deposit Scheme: மனிதர்கள் அனைவருக்கும் பணத்திற்கான தேவை இருக்கின்றது. நாம் உழைத்து செல்வத்தை ஈட்டுகிறோம். அப்படி ஈட்டும் செல்வத்தை பெருக்கவும் சேமித்து வைக்கவும் பல வித திட்டங்களில் முதலீடு செய்கிறோம் எதிர்காலத்தின் பாதுகாப்பிற்காகவும் அவசர தேவைகள் ஏற்பட்டால் அப்போது பயன்படுத்தவும், நம்மிடம் இருக்கும் பணத்தை அதிகப்படுத்துவதற்காகவும் பெருக்குவதற்காகவும் முதலீடுகள் செய்யப்படுகின்றன.
முதலீடுகளில் பல வகைகள் உள்ளன. ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் பலர் பங்குச் சந்தைகள் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். இவற்றில் பணத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் லாபம் அதிகமாக இருக்கும். ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்கிறார்கள். பெரும்பாலான நடுத்தர வர்க்கத்திர் இப்படிப்பட்ட முதலீட்டு திட்டங்களை விரும்புகிறார்கள்.
அஞ்சல் அலுவலகம் இப்படி பல சேமிப்பு திட்டங்களை கொண்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் நாம் பணத்தை பாதுகாப்பான வழியில் சேமித்து வைக்கலாம். இந்த திட்டங்களில் ஒன்றுதான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம். அஞ்சல் அலுவலகத்தின் சிறுசேமிப்பு திட்டமான இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தை பற்றி இங்கே காணலாம்.
அஞ்சல் அலுவலக நேர வாய்ப்பு திட்டம் அதாவது போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் பாதுகாப்பான முதலீட்டில் தங்கள் பணத்தை சேமித்து வைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற திட்டமாக உள்ளது. இதில் 5 லட்சம் ரூபாய் முதலிடு செய்து வட்டியில் மட்டும் 2.25 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இந்தத் திட்டத்தின் கால அளவு முடிந்தவுடன் பிரின்ஸ்பல் அமௌன்ட் அதாவது முதலில் முதலீடு செய்த 5 லட்சம் ரூபாயும் திரும்ப கிடைத்துவிடும். இதைத் தவிர இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டாளர் வரி சலுகையும் பெறலாம்
இந்தத் திட்டத்தில் உள்ள கால அளவுகள் என்ன
போஸ்ட் ஆபீஸ் (Post Office) டைம் டெபாசிட் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் 1 ஆண்டு. 2 ஆண்டுகள். 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான கால அளவில் முதலீடு செய்யலாம். 2024 ஜனவரி ஒன்றாம் தேதியின் அடிப்படையில் இந்த திட்டத்தில் 6.9%, 7.0%, 7.1% மற்றும் 7.5% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கின்றது. இந்த வட்டி விகிதம் மார்ச் 31ஆம் தேதி வரை பொருந்தும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதத்தில் திருத்தம் இருக்கும். இதன் கணக்கீடு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வட்டி செலுத்துதல் ஆண்டுக்கு ஒரு முறையும் இருக்கும்.
5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 2.25 லட்சம் ரூபாய் வட்டி கிடைக்கும்
Post Office Time Deposit Calculator இன் பட, ஒரு முதலீட்டாளர் இந்த திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 5% வட்டியின் கணக்குப்படி ஐந்து ஆண்டுகளில் 2.25 லட்சம் ரூபாய் வட்டித்தொகையாக கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு முதலீட்டாளர் முதலில் செலுத்திய ஐந்து லட்சம் ரூபாயையும் திரும்பப் பெறுவார்
இந்த திட்டத்தை யார் தொடங்க முடியும்?
- இந்த டைப் டெபாசிட் திட்ட கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம்.
- 3 பெரியவர்கள் சேர்ந்து கூட்டுக் கணக்கையும் (Time deposit Joint account) திறக்கலாம்.
- 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம்.
Post Office Time Deposit: இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன
இந்தியா போஸ்டின் இணையதளத்தில் இந்த திட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் முதலீடு செய்யலாம் என்பது தெளிவாகிறது. அதன் பிறகு 100 ரூபாய் மடங்குகளில் இந்த திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்யலாம். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒருவர் எத்தனை டைம் டெபாசிட் கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். இத்திட்டத்தில் ஆண்டுதோறும் வட்டி செலுத்தப்படும். ஐந்து ஆண்டுகளுக்கான திட்டத்தில் வரி சலுகையும் கிடைக்கும். இந்த சலுகை பிரிவு 80cc இன் கீழ் கிடைக்கும். ஒரு முதலீட்டாளர் இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு திட்ட காலத்திற்கு முன்பாகவே இதை மூட நினைத்தால் அதாவது ப்ரீமெச்சூர் செய்த செய்ய நினைத்தால் அதற்கு குறைந்த பட்சம் திட்டம் தொடங்கி ஆறு மாதம் ஆகி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. FD வட்டியை உயர்த்திய 2 பிரபல வங்கிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ