திருமணமான பெண்களுக்கு ஜாக்பாட், இனி உங்களுக்கு 6000 ரூபாய் கிடைக்கும்

Modi Govt Scheme For Women: அமைப்புசாரா துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தவிர, திருமணமான பெண்களுக்கான திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதன் முழு விவரத்தை இங்கே காணபோம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 25, 2023, 04:34 PM IST
  • இந்த திட்டத்தில் நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • இந்த திட்டம் ஜனவரி 1, 2017 அன்று தொடங்கப்பட்டது.
  • நேரடியாக கர்ப்பிணிகளின் கணக்கில் அனுப்பபடும்.
திருமணமான பெண்களுக்கு ஜாக்பாட், இனி உங்களுக்கு 6000 ரூபாய் கிடைக்கும் title=

PM Matritva Vandana Yojana: ஒவ்வொரு பிரிவினரையும் மனதில் வைத்து மோடி அரசு அனைத்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் அமைப்புசாரா துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தவிர, திருமணமான பெண்களுக்கான திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. அதிலும் பெண்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது. நிதி வகைகயில் இன்று நாம் அப்படிப்பட்ட ஒரு திட்டத்தைப் பற்றி தான் காண உள்ளோம், அதில் பெண்ணுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ 6000 வழங்கப்படும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த திட்டத்தின் பலன் திருமணமான பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

திட்டத்தின் விவரக்குறிப்பு
- கர்ப்பிணிப் பெண்ணின் வயது குறைந்தது 19 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்தில் நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- அரசாங்கம் 6000 ரூபாயை பெண்ணின் கணக்கில் 3 தவணைகளில் அனுப்பும்.
- இந்த திட்டம் ஜனவரி 1, 2017 அன்று தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க | Old Pension Scheme: சுமுகமான முறையை ஆராயும் அரசு, உத்தரவாதமான வருமானம் கிடைக்குமா?

பணம் பெறுவது எப்படி?
இத்திட்டத்தில் பெண்களுக்கு முதல் கட்டமாக 1000 ரூபாயும், 2ம் கட்டமாக 2000 ரூபாயும், கர்ப்பிணிகளுக்கு மூன்றாம் கட்டமாக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது. கடைசியாக மீதமுள்ள 1000 ரூபாயை குழந்தை பிறக்கும் போது அரசு மருத்துவமனையால் வழங்கப்படும்.

ஹெல்ப்லைன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்
மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் தொகை நேரடியாக கர்ப்பிணிகளின் கணக்கில் அனுப்பபடும். மேலும் இதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், 7998799804 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சரிபார்க்கவும்
https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இங்கே பெறுவீர்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட்: அகவிலைப்படி அதிகரிப்பால் உயரும் ஊதியம், முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News